September 30, 2023

துல்லிய ஜோதிட கணிப்புகளால் ஆச்சரியப்படுத்தும் சேலம் ஜோதிடர் பாலாஜி..!

துல்லிய ஜோதிட கணிப்புகளால் ஆச்சரியப்படுத்தும் சேலம் ஜோதிடர் பாலாஜி..!
ஜோதிட உலகில் ஆச்சர்யப்படுத்தும் பொறியியல் பட்டதாரி..!  
 
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் P. பாலாஜி,  நிசான் ( Nissan ) நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரியான இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.. அதுதான் ஜோதிட வல்லுநர். ஆம் பின்னால் நடப்பவற்றை முன்கூட்டிய கணித்து சொல்லும் இவர் ஜோதிடத்தில் முறையாக குருகுல பயிற்சி பெற்றவர்.  
 
கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. தேர்தல் போன்ற கணிப்புகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிஜ நிஜ முடிவுகளுடன் ஒத்துப்போயிருக்கின்றன.  
 
ரஜினிகாந்த் கடந்த வருடம் முதன்முறையாக தனது ரசிகர்களை அழைத்து சந்திக்க ஆரம்பித்தபோதே அவர் அரசியலுக்குள் நுழைவார் கட்சி ஆரம்பிப்பார் என  திட்டவட்டமாக கூறியிருந்தார் பாலாஜி.
 
தமிழகம் மட்டுமல்லாமல் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, குஜராத், கோவா, இமாச்சல பிரதேஷ்,  உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில்  யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிட ஆராய்ச்சி ரீதியாக கணித்து எழுதியவை அப்படியே நடந்துள்ளது . மேலும் பல அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது இவரது முகநூலில் லைவ் மூலம் கணித்துவருகிறார். மேலும் இயற்கை பிரச்சனைகள் பற்றியும் கணித்து சொல்கிறார்.
 
தமிழகத்தில்  முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவு செய்தி, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி, மேலும் 4 நாட்களுக்கு முன் திரு. மு க அழகிரி அவர்கள் தனிக்கட்சி ஏதும் காணமாட்டார் அவர் தி .மு க தலைவர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்தே பயணிப்பார் போன்ற தகவல்களை முன்கூட்டியே சொல்லி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
 
மேலும் 4 மாதங்களுக்கு முன்பே, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வரும் என்றும் அந்த குறிப்பிட்ட மாவட்டங்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடைசியாக கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பா ஜ க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றும் என்றும் ஆனாலும் கர்நாடக மாநில ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அவர்களே மிகப்பெரும் சக்தியாக விளங்குவார் என ஒரு மாதத்திற்கு  முன்பே கூறியிருந்தார்.   
 
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் பிரச்சனை வரும் இந்தியா என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கும், எந்த அரசியல் தலைவருக்கு மாற்றம் வரும் என்பதையும் அந்தந்த சமயங்களில் தெளிவாக கணித்து கூறிவருகிறார். ரஷ்ய தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என கூறிய இவர், லேட்டஸ்ட்டாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்தும், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பார் என்பது குறித்தும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும்  பெற்றுவரும் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம்  ஈரோட்டில் நடந்த ‘அகில இந்திய ஜோதிட மாநாட்டில்’ கலந்து கொண்டு ‘ மழை பற்றிய பிரசன்னம்’ மற்றும் ‘நில நடுக்கம்’ பற்றி பேசியதற்காக ‘ உலகியல் ஜோதிட இளம் சுடர்’ எனும் விருதை உயர் நீதி மன்ற நீதிபதி டாக்டர் ஜோதிமணி , அரசு செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் அவர்களின் கையால்  அவர்களுக்கு வழங்கப்பட்டது.   
 
இந்த தகவல்கள்  அனைத்தும் அவரது முகப்புத்தகத்தில் 
 
 
பெரும்பாலும் லைவ் விடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *