சென்னை தலைமை செயலகம் முன்பு 16.08.2018 காலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரி பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார சமூகநல திட்ட பயனாளிகள் கோரிக்கைமனு கொடுத்தனர் .
சமூகநல திட்ட பயனாளிகள் காலை 11 மணி அளவில் சென்னை தலைமை செயலகம் வந்து மனு கொடுத்தனர் . வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் ஆற்றி வந்த பல சமுதாய நலத்திட்டங்கள் பல ஆயிரம் மக்களுக்கு பயனளித்து வந்தன. குஷி திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு, பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் மூலம் பல ஆயிரம் பெண் குழந்தைகளுக்கும், வேலை இல்லாமல் பல இன்னல்களை அனுபவித்து வந்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. அத்துடன் இன்னும் பல சிறப்பான திட்டங்களை ஸ்டெர்லைட் செயல்படுத்தி வந்தது.
மேலும், சகி என்னும் திட்டத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு முக்கிய பங்கு வகிக்கும் பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து, இலவச தொழில் பயிற்சி அளித்து, அவர்களுக்கு கடன்பெற்று தந்து தொழில்முனைவோராக்கியிருக்கிறது. அவர்களுக்கு விருது வாங்கி கொடுத்து ஊக்கமும் அளித்து வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் அடைத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், பல சமுதாய நலத்திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேலான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் .
ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 23 வருடங்களாக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கி பல்லாயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. மேலும் பல கோடிகள் ரூபாய்கள் மதிப்புள்ள சமுதாய வளர்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் பெட்டகமாய் 100% பாதுகாப்புடன் இது இயங்கி வந்தது.