தென்னிந்திய திரைப்பட,சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் வருகிற மார்ச் மாதம் 3 ம் தேதி டப்பிங் சங்கத்திற்கான தேர்தலை நடத்த இருக்கிறது.
டப்பிங் சங்க வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் என்பது முறையாக நடத்தப்படாமல் தலைமையை தன்னிச்சையாக தேர்ந்தெடுத்து வந்தனர். முதல்முறையாக நீதிமன்ற தலையீட்டோடு நடுநிலையான ஒரு தேர்தலை இந்த முறை நடத்த இருப்பதால் “ராம ராஜ்யம் அணி”என்ற பெயரில் புதிய அணி களமிறங்குகிறது. இதற்காக நேற்றைய தினம் தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினர்.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட டப்பிங் சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
திரு.ரத்தன்குமார் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இந்த அணியில் செயலாளர் தசரதி சங்க தேர்தலில் “ராம ராஜயம்” அணி சார்பில் போட்டியிடுகிறார்.இந்நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் சிஜூ தாமஸ் உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை நடிகர்,நடிகைகள் டப்பிங் கலைஞர்கள் பங்கேற்றனர்