தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 2018–2019 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு…!
பிலிம் சேம்பர் என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 2018 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
ஓவ்வொரு வருடமும் ஓவ்வொரு மொழிக்கான திரைவுலகிலிருந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முறையில் இந்த முறை தெலுங்கு பட தயாரிப்பாளரான காட்ரகட்ட பிரசாத் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயலாளர்களாக ரவி கொட்டாரக்கரா, என். ராமசாமி இருவரும் மீண்டும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
துணைத் தலைவர்களாக நான்கு மொழி திரைவுலகிலிருந்தும் கலைபுலி.எஸ்.தாணு, கே.வெங்கடேஷ்வரராவ், எஸ்.எஸ்.டி.சுப்பிரமணியம், தாமஸ் டிசோசா ஆகிய நால்வரும் ஏகமனதாக தேர்வாகி உள்ளனர்.
பொருளாளர் பதவிக்கு கோபால்தாஸ் ஜெகன்னாததாஸ் மற்றும் வி.எம்.கிருஷ்ணா இருவரும் போட்டியிட்டனர் இதில் கோபால்தாஸ் ஜெகன்னாததாஸ் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார்.
செயற்குழு உறுபினர்களாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கே.முரளிதரன், ஏ.எல்.அழகப்பன், கிருஷ்ணா ரெட்டி, டி.ஜி.தியாகராஜன், மாதேஷ், எம்.கபார், கங்காதர், ஹெச்.முரளி, முகேஷ் மேத்தா, பிரசன்ன குமார், திலிப் கொச்சுமோன், கே.எஸ்.ராமராவ், சாய் பிரசாத், சுரேஷ், சையது கோகர், ஜி.பி.விஜயகுமார் ஆகியோரும்…
வினியோகஸ்தர்கள் பிரிவு சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக டி.எ.அருள்பதி, ஆர்.முருகன், நாராயண ரெட்டி, பொன் தேவராஜன், ஆர்.செல்வின்ராஜ், எம்.ஒ.ஷாகுல் அமீது, ஜி.ஆர்.சண்முகம், எம்.வெங்கடேஸ்வரராவ் ஆகியோரும்…
ஸ்டுடியோ பிரிவு சார்பில் வெங்கடாத்திரி, ராமகிருஷ்ணா, ராஜலட்சுமி, ரவி குமார் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
திரையரங்கு உரிமையாளர் பிரிவில் எவி.எம்.கே.சண்முகம், அம்பிகாபதி, ஜெயகுமார், நந்தகுமார், நரசிம்மா, ராம்பிரசாத், சுப்பையா, சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவும் பொதுக்குழு கூட்டமும் இன்று மாலை(28/08/2018) 6 மணியளவில் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரியான ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார்.
இந்தப் பதவி ஏற்பு விழாவில் பிலிம் சேம்பரின் முன்னாள் தலைவர்கள் கல்யாண், ஆனந்தா எல்.சுரேஷ், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல், துணைத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.