வைஜயந்தி மூவீஸ் சார்பில் அஸ்வின் தத் தயாரிக்க , கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில்,
தமிழ் தெலுங்கு மலையாளம் , இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் படம் ‘நடிகையர் திலகம்’ .
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வரும் இந்தப் படத்தை தமிழில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார்
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பளார் அஸ்வின் தத் ,

அவரது வரலாற்றை படமாக எடுப்பதில் பெருமைப் படுகிறோம் ” என்றார் .
“சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சொல்லும் ஒரு படத்தை தமிழில் வெளியிடுவதில் மகிழ்ச்சி ” என்றார் ரவீந்திரன் .

” காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகை சாவித்திரி. அவரது நடிப்பு என்றும் மறக்க முடியாத ஒன்று. குறிப்பாக நவராத்திரி படத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் போல பொய்யாக நடிக்கும் நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது .
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது கீர்த்தி சுரேஷ் இதற்கு பொருத்தமாக இருப்பாரா ? சரி வருமா ? சாவித்ரிக்கே இது கேவலம்’ என்றெல்லாம் பலரும் பேசினார்கள் .
ஆனால் அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல் தன பங்களிப்பை சரியாக செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ் .

இந்தப் படத்துக்கு பாடல் எழுதியது பெருமைக்குரிய விஷயம் ” என்றார் பாடலாசிரியர் கார்க்கி .
கீர்த்தி சுரேஷ் பேசும்போது ,
இந்த படத்தில் நடித்ததன் மூலம் அந்த மாபெரும் நடிகையை நெருக்கமாக உணர முடிந்தது. மேக்கப் மற்றும் உடைகளில் மிக கவனம் செலுத்தி இருக்கிறோம் .
திரைக்கு அப்பாற்பட்ட சாவித்ரியை பற்றி அதிகம் பேசும் படம் இது .

இது சாவித்ரியம்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அதே நேரத்தில் வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் ” என்றார் .