இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் EON ஸ்டுடியோஸ் தயாரிக்க,
ஜோதிகா, ஜி வி பிரகாஷ், இவானா, தயாரிப்பாளர் தமிழ்க் குமரன் , மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் நடிப்பில் பாலா இயக்கி இருக்கும் படம் நாச்சியார் இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் விசாரனையில் இவானாவும், ஜிவியும் காதல் கொண்டவர்களாய்த் தெரிய வர, இருவரும் மைனர் என்பதால் ஜிவியை மைனர் ஜெயிலில் அடைக்கிறார்கள். இவானாவை ஜோதிகாவே பராமரிப்பில் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் இவானாவின் குழந்தைக்கு ஜி.வி.பிரகாஷ் தந்தையில்லை என்று டி.என்.ஏ ரிப்போர்ட்டில் தெரிய வர, யார் அந்த குழந்தைக்கு தந்தை? என்ற தேடலில் ஜோதிகா இறங்குவது தான் மீதி படம்



