September 24, 2023

நிமிர் – சினிமா விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி இருக்கும் படம் நிமிர் .

இரண்டு வருடம் முன்பு மலையாளத்தில் வெளிவந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் . 
இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்) . 
 
அவரது தந்தை தனித்துவமான குண இயல்பும் புகைப்படம் எடுக்கும் திறமையும் நிறைந்த புகைப்படக் கலைஞர் (இயக்குனர் மகேந்திரன் ) 

செல்வம் கேரக்டரில் அருமையாக பொருந்தி இருக்கிறார் உதயநிதி . 
 
இயக்குனர் மகேந்திரனுக்காக பாத்திரத் தேர்வும் , அவரது நடிப்பும் அபாரம் . 
 

படம் துவங்கிய உடனேயே மனத்தைக் கவர்கிறது ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கடைசி வரை தொடர்கிறது அந்த மனம் கவர்தல் . 

தர்புக  சிவா , அஜ்னேஷ் லோகநாத் இசையில் பாடலும்  பின்னணி இசையும் ஒகேதான் . 

காதலிச்சவனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க அவசியம் இல்லை . அம்மாவை ஒரு தடவை கட்டிப் பிடிச்சு அழுதுடு . எல்லாம் சரியாக போயிடும் ” என்று வள்ளியின் அம்மா சொல்லும் இடம் அப்படியே மலையாள ஸ்டைல் . 

தவிர படத்தையும் மலையாளப் படம் போலவே எடுத்து இருக்கிறார் பிரிய தர்ஷன் . அப்புறம் எதுக்கு தமிழில் எடுக்கணும் .?அதே நேரம் ஒரிஜினல் மலையாளப் படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை கவனமாக உருவி வெளியே போட்டு இருக்கிறார் இயக்குனர் .
 ஒரு காட்சியில் செல்வத்தின் தந்தை காணாமல்போய்விட போலீசுக்குப் போகும் நண்பர்  நம்ம போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எதுக்கும் கேரளா போலீசிடமும் சொல்லி தேட சொல்லுங்க சார் ” என்பார் .மேலோட்டமாக பார்த்தால் கேரளா எல்லைக்குள்ளும் காணமல் போயிருப்பவர் போயிருக்கலாம் . அதனால் சொல்றார் என்பது போல ஒரு மேல் பூச்சு சமாதனம் இருந்தாலும் , தமிழ்நாடு போலீஸ் வேஸ்ட் . கேரளா போலீஸ் பெஸ்ட் என்ற தொனி மேலோங்கி நிற்கிறது . 

வேங்கடாஜலதி புகைப்படத்தை சுற்றி ஓடும் சீரியல் செட் பல்புகளை பார்க்கும் போது பின்னணியில் சொர்க்கம் மதுவிலே பாட்டு ஒலிக்க, செல்வத்தின் அப்பாவுக்கும்  நண்பருக்கும் கேபரா டான்ஸ் பார்க்கப் போக ஆசை வருகிறது . அதுவும் ஒன்றுக்கு இரண்டு முறை !
 
(ஆண்டாள் விசயத்தில் தாண்டிக் குதித்த எச்-சைகளுக்கும் பிச்சைப் பொறுக்கிகளும் இதற்கு எல்லாம் வாயைத் திறக்க மாட்டான்கள். உண்மையிலயே இவனுங்கதான் நிஜமான் நாத்திகன்கள் !)படத்தின் முக்கிய விஷயமான செல்வம் – முரடன் கிளைமாக்ஸ் மோதலை அந்த பதட்டம் பரபரப்பை மிஸ் பண்ணி சு

மக்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் போலவே தெரியல . 
 
எந்த பில்டப்பும் பாசாங்கும் பந்தாவும் இல்லாமல்  எளிமையான கதாபாத்திரங்களுக்கு தன்னை கொடுக்கும் உதயநிதியின் மனப்பாங்கு அருமையானது  பாராட்டுக்குரியது . உதயநிதி ஸ்டாலின் தன்னை ஒரு நடிகனாக நிரூபித்துவிட நிறைய மெனக்கெடுகிறார். கருணாகரன், கஞ்சாகருப்பு, சண்முகராஜன், கஞ்சா கருப்பு, ஆரோக்கிய தாஸ் என அனைவருமே தாறுமாறாய் சிரிப்பு மூட்டியிருக்கலாம். அதிலும் ஆரோக்கியதாஸ்  துக்க வீட்டில் பஞ்சாயத்து செய்யும் காட்சியும், கஞ்சா கருப்பு நெல்லிக்காய் விற்கப் போகுமிடத்தில் நடப்பதும் கண்டிப்பாய் உங்களை சிரிக்க வைக்கும்.
 அனுபவம் மிக்க நடிப்பு என்றால் என்னவென்று, இயக்குநர் மகேந்திரன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். அநாயசமாக நடிக்கிறார்கள் இருவரும். இருந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் அதிகம் ஈர்க்கிறார். சமுத்திரக்கனியை அடிப்பதற்காக உதயநிதி வேகமாக போகும் போது கூட செல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் அந்த நடை, சூப்பர்!
சமுத்திரக்கனி. அந்த வெள்ளையப்பன் கேரக்டருக்கு படத்தில் ஒன்றுமில்லை
 தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார்கள். அத்தனையும் மயிலிறகாய் வருடும் மெல்லிசைத் தாலாட்டு. அதிலும் தாமரையின் வரிகளில்  “நெஞ்சில் மாமழை” பாடல் சூப்பர்!நகைச்சுவை என்றாலே இரட்டை அர்த்த வசனமும், மற்றவரை உருவத்தைக் கொண்டு கேலி செய்வதும் தான் என்றான  காலகட்டத்தில், “நிமிர்” நிச்சயமாக ஒரு நல்ல சினிமா தான்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *