November 29, 2022

பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் !!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால நிர்வாகி முறையாக செயல்படவில்லை என கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு

போராட்டத்தில் ஈடுபட்டனர்….சென்னை அமைந்கரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பச்சையப்பா அறக்கட்டளைக்கு கடந்த ஜூலை மாதம் இடைக்கால நிர்வாகியாக சண்முகம் நியமிக்கப்பட்டார்,இவர் முழுநேர பணியில் இருப்பதில்லை என்றும் இதனால் அறக்கட்டளையிம் கீழ் இயங்கும் ஆறு கல்லூரிகளில் நிர்வாகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளின் ஒழுங்காற்று சட்டத்தை மாற்றும் முயற்சியில் தற்போது உள்ள நிர்வாகி சண்முகம் மாற்ற முயற்சி செய்வதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு காலியாக உள்ள எட்டு நிர்வாகிகளை நியமிக்க தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகி சண்முகம்,தேர்தலை நடத்த தவறி விட்டு சட்ட திட்டங்களை மாற்ற முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

பைட் : சாந்தி (( பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு – பச்சையப்பன் கல்லூரி))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *