June 25, 2022

படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான  விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா

படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய்  சேதுபதியின் ‘ஜுங்கா

 

படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே ஏ&பி குரூப்ஸ்(A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பு தரப்பில் பேசும்போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. 

ஏ&பி குரூப்ஸ்(A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம்..” என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *