பெருமதிப்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய எங்களது சென்னை பெருநகர காவல் ஆணையார் திரு.ஏ.கே.விசுவநாதன்,இ.கா.ப., அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் தமிழகத்தின் சிறந்த காவல் ஆணையாளருக்கான விருது 07.3.2018 அன்று வழங்கப்பட்டது. இதனையொட்டி சென்னை பெருநகர காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் மனமகிழ்மன்றம் மற்றும் சங்கத்தின் சார்பாக எங்களது காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விசுவநாதன், இ.கா.ப., அவர்களை நேற்று (08.3.2018) மாலை சுமார் 04.00 மணியளவில் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறியபோது காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விசுவநாதன்,இ.கா.ப., அவர்களும், சென்னை பெருநகர காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய வாழ்த்துக்களை தெரிவித்து அலுவலக விஷயங்களை கலந்துரையாடி தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தி சிறப்பான அறிவுரைகளை வழங்கினார்.
