அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது ‘பதுங்கி பாயனும் தல’ திரைப்படம். இந்தப் படத்தில் ‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் எனப் பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மொத்த செட்யூல் 53 நாட்கள், ஆனால் 45 நாட்களில் படத்தை முடித்து தயாரிப்பாளரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் மோசஸ் முத்துப்பாண்டி. குழந்தைகள், குடும்பத்தோடு அமர்ந்து வயிறு குலுங்க சிரித்து ரசிக்கும் படியாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக் குழு எந்த வெட்டும் கொடுக்காமல் ‘U’ சான்றிதழ் வழங்கி பாராட்டி இருக்கிறது.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் பாடலை S.A.சந்திரசேகர் வெளியிட T.ராஜேந்தர், கயல்சந்திரன் மற்றும் தல படங்களின் கேமராமேன் வெற்றி பெற்றுகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய டி.ராஜேந்தர், “ஆஸ்கர் அவார்டு வென்ற ஏ.ஆர்.ரஹ்மான்கிட்டயே இசைக்காக பாராட்டு பெற்ற என்னை ‘டண்டணக்கா’னு கிண்டல் பண்றியா.. என்னை தலன்னு ஒருத்தர் கூப்பிட்டாரு. 1980 மே மாசம் ஒண்னாந்தேதி ரிலீஸ் ஆச்சே.. ஒருதலைராகம். அப்பவே நான் தல. அப்பவே தமிழ்நாடு இல்ல உலகமே தெரிஞ்சிக்கிச்சு இந்த தமிழனோட கலை” என வழக்கம்போல எதுகை மோனையில் பேசி விழாவை களைகட்ட வைத்தார் .. அதனால்தான் டி.ராஜேந்தருக்கு கொடுக்குறாங்க விலை. ஆனா, அரசியல்ல போகமாட்டேன் விலை!” எனப் பேசினார்.