November 29, 2023

பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..

பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..

வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!
படைப்பாளிகளின் சுதந்திரத்தை நசுக்காதீர்கள்” ; தொட்ரா’ இசைவெளியீட்டு விழாவில் பொங்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 
“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..!
“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” ; கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி
என் கணவரை ஹீரோவாக பார்க்கமுடியலை” ; அதிரவைத்த ‘தொட்ரா’ பட தயாரிப்பாளர் 
ஹீரோயினை அடித்ததற்காக மேடையில் மன்னிப்பு கேட்ட ‘தொட்ரா’ பட இயக்குநர்
“பட டைட்டிலை ஒரே இடத்தில் மட்டும் பதிவுசெய்ய வேண்டும்” ; ‘தொட்ரா’ இசைவெளியீட்டு விழாவில் வலுத்த கோரிக்கை
“டைட்டில் விஷயத்தில் இயக்குநர்களின் முயற்சி என்ன ஆயிற்று..? ; கலைப்புலி தாணு கேள்வி..!
 
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
 
பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன்,  கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
 
தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயா ரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன்,  நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன்,  அரீஷ் குமார்,​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா , பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக் குழுவினரும் கலந்துகொண்டனர். 
தொடர்ந்து பேசிய நடிகர் லொள்ளுசபா ஜீவா,
 
“சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர்.. ஆனால் குறைவான சம்பளம் என்பதால் கேரளாவில் இருந்து சினிமா தொழிலாளர்களை அழைக்கிறார்கள். அதனால் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என சம்பளப் பிரிவுகளை உருவாக்கி விட்டால் அவரவர் விருப்பப்பட்ட சம்பளம் கிடைக்கும் படங்களில் பணிபுரிந்துகொள்வர்களே” என ஒரு யோசனையை சொல்லிவிட்டு அமர்ந்தார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“ ரசிகர்களும் தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான்.. கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக்கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும்.. இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலை களும் செய்வதற்கு கணவனுக்கு பழகிவிடும். அப்படித்தான் போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப்போக ரசிகர்களுக்கு சினி மா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும்.. நல்லவேளையாக சீக்கிரமே வே லைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என கூறினார்.    
நடிகர் பரத் பேசும்போது,
 
“தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள்.. உண் மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங் கிக் கொடுத்தது… அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். 
நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “
 
இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர் களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும்.. இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னா லேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.
படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மைனா சூசன் பேசும்போது,
 
“ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஓர் ஆண் இருப்பார்கள்.. அந்தவகையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் வெற்றிக்கு அவரது கணவர் குமார் முக்கிய காரணம்.. ஒரு நடிகராக தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காட்சியில் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் கொடுத்துள்ளார்” என்றார் ஜாலியாக..
அடுத்தாக பேசியவர்களில் இயக்குநரும் பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஆர்கே.செல்வமணி
 
திரையுலகம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் சற்று சீரியஸாகவே பேசினார்.. “கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழி ற்துறை யாக அங்கீ கரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீப த்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொ ற்சாலையாக மாற்றாமல் விட் டுவிட்டார்கள்.. பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழி லாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள். ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம். தயாரிப்பாளர்கள் இந்த வே லைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள். 
 
 
ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொ ருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.. இந்த துறையை சரியாக கட்ட மைக் காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை. சினிமா என்கிற இந்த குள த்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
  ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடை ப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழா க்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய்  கட்ட ணம்  செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரி ப்பாள ர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒரு நாளை க்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக் கு கொண்டுவந்துவிட்டது யார்..? பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *