September 24, 2023

பாலாவின் ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகும் நாயகி மேகா

நாச்சியார்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரமின் மகன் துருவ்  கதாநாயகனாக நடிக்கும் ‘வர்மா’ படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கம்.

இந்தப் படத்தை இயக்குநர்  பாலாவின்  பி  ஸ்டுடியோஸ்  வழங்க  இ-4  எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா என்னும் புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா.

படத்தின் படப்பிடிப்பு  தொடங்கிய  நாள்  முதலே  பலரின்  எதிர்ப்பார்ப்புக்கு  உள்ளாகியிருக்கிறார் கதாநாயகி மேகா.

Actress Megha (4)

இவர் பெங்காலி நடிகை. தற்போது  தமிழ்  திரையுலகிற்கு  இந்த ‘வர்மா’  படம்  மூலமாக  அறிமுகமாகிறார்.

கதக் நடனத்தை முறையாகக் கற்றிருக்கும் இவர் தமிழ்ச் சினிமாவின் நட்சத்திர இயக்குநர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி மேகா பேசுகையில், “நான் அடிப்படையில் ஒரு கதக் டான்ஸர் இதுக்கு முன்னாடி வங்க மொழி படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இது எனது நடிப்பு கேரியரில் இரண்டாவது படம். தமிழில் முதல் படம். நான் மும்பைல இருக்கும்போது காம்பியரிங் பண்ணியிருக்கேன். மாடலிங் பண்ணியிருக்கேன். 

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை நான் பார்த்தேன். அந்த படத்தோட ஹீரோதான் இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாருக்கம் ட்ரீம் பாய். அவ்வளவு உண்மையா காட்டியிருக்காங்க..

ஆனால் அந்தப் படத்தோட கம்பேர் செஞ்சா ‘வர்மா’ 60 சதவிகிதம் வேற மாதிரிதான் இருக்கும். ‘வர்மா’வை பார்த்தீங்கன்னா ‘அர்ஜூன் ரெட்டி’யைவிட்டு ‘வர்மா’வை லவ் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. அந்த அளவுக்கு மாற்றம் இருக்கும்.

நான் முதல்முறை பாலா சாரை மீட் பண்றப்போ எனக்கு அவ்வளவு பயம் இருந்துச்சு. அவர் ரொம்ப சீரியஸா இருந்தார். மொழி பிரச்சினை வேற.. ஆனால் யார் சொன்னாலும் நம்பாதீங்க. அவர் ரொம்ப, ரொம்ப சாப்ட்டானவர். பொறுமையா அவருக்கு என்ன வேணும்ன்றதை சொல்றார். கரெக்ட்டா செஞ்சு முடிக்குறவரைக்கும் விட மாட்டார். பாலா ஸார் செட்ல யார்கிட்டேயும் ரூடா நடந்து நான் பார்த்ததே இல்லை..” என்று சான்றிதழ் தருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *