பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை காப்பது பற்றிய கண்காட்சி
https://youtu.be/kdAOcShbym8
பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை காப்பது பற்றிய கண்காட்சியை எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகிறது .இது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நிலவி வரும் பிரச்சினையாகும்.
அதனால் தான் வாஸ்(WAAS) எனப்படும் உலக பாலியல் சங்கம், இந்த பிரச்சினையை கையிலெடுத்து பாலியல் வன்முறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், விவாத மேடை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது . மேலும்
ஒவ்வொரு ஆண்டும் செப்.4 ஆம் தேதியை உலக பாலியல் சுகாதார தினமாக அறிவித்து அன்று பல்வேறு செயல் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்திய பாலியல் கல்வி மையமும், ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையமும் இணைந்து டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனையில் ஆண்டு தோறும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தற்போது செப்.7, 8, 9 ஆகிய தேதிகளில் பாலியல் தொடர்ப்பான கண்காட்சி நடக்கிறது.