March 31, 2023

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின்  அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
 
பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி 2வது சீசனில் அசத்தி சாம்பியன் பட்டத்தை வென்று,  முன்பேவிட அதிக பலத்துடன் களம் காண்கிறது. 
 
இந்நிலையில் சென்னை ஸ்மாசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை அறிமுகப்படுத்தும் விழா, சென்னை வடபழனியில் உள்ள போரம் மாலில் நடைபெற்று வருகிறது. இதில் பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *