November 28, 2023

பிரியங்கா சோப்ராவின் ‘அன்பினிஸ்ட்

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா அதே ஆண்டு உலக அழகி பட்டத்தையும் வென்றார். அதன் மூலம் இந்தி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

ஹாலிவுட்டில் குவாண்டிகா என்ற டிவி தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா இரண்டு முறை சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதினை பெற்றுள்ளார். நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகி, யுனிசெப்பின் நல்லெண்ண தூதர் போன்ற பன்முகங்கள் கொண்ட பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.

‘அன்பினிஸ்ட்’ என்ற இந்த புத்தகத்தில் பிரியங்காவின் வாழ்க்கை குறித்த கட்டுரைகள், கதைகள் மற்றும் அவர் குறித்த கருத்துகள் போன்ற இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். இதனை அமெரிக்காவில் பலண்டைன் புக்ஸ் நிறுவனமும், பிரிட்டனில் மிச்செல் ஜோஷப் நிறுவனமும் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *