‘பில்லா பாண்டி’ திரைப்படம் என் பார்வையில்….
இந்த தீபாவளியை அஜீத் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி ஆகக் கொண்டாடச் செய்யும் படம்
பில்லா பாண்டி & கோ சமூக நற்பணிகள் செய்துவரும் கிராமத்து இளைஞர்கள். பில்லா பாண்டியும் (ஆர்.கே.சுரேஷ்) அவரது மாமன் மகள் வள்ளியும் (சாந்தினி) சிறுவயது முதல் காதலிக்கிறார்கள். கொத்தனார் வேலை செய்யும் பில்லா பாண்டியின் நல்ல குணங்கள், ஊருக்குப் புதிதாக வந்த ஜெயலக்ஷ்மியைக் (இந்துஜா) கவர்கின்றன. ஜெயலக்ஷ்மியின் பணத் திமிர் பிடித்த தந்தை அவளுக்குப் பணக்கார வரனைக் கொண்டுவர, ஊர் மக்கள் முன்னிலையில் ஜெயலக்ஷ்மி, தான் பில்லா பாண்டியைக் காதலிப்பதாகவும், அவருடன் ‘வாழ்ந்துட்டேன்’ என்றும் சொல்கிறாள் !
இதன் பிறகு வரும் எதிர்பாரா திருப்பங்கள்தான் திரைக்கதையின் பலம் !
முதல் பாதி வரை கொண்டாட்டமும் கும்மாளமுமாக படத்தைக் கொண்டு போகும் இயக்குநர் ராஜ் சேதுபதி, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டி அதை இறுதி வரை மெயின்டெயிண் செய்திருக்கிறார் !
அஜீத்தின் பெருமைமிகு ரசிகராக அருமையாக வீரம், ஆக்ரோஷம், காதல், கருணை என அனைத்திலும் கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் (Y) வில்லன் நடிகராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் இதில் நாயகனாக உதயமாகி இருக்கிறார் ?
விபத்தில் மூளை பாதித்து ஏழு வயதுச் சிறுமியாக உலா வரும் இந்துஜா – அவரைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும் ஆர்.கே.சுரேஷ் காட்சிகள் ‘மூன்றாம் பிறை’யின் மெல்லுணர்வை நம்முள் உயிர்த்தெழச் செய்கின்றன ! (சில காட்சிகளில் ஏழு வயதுச் சிறுமியாக அன்றி நாலு வயதுக் குழந்தை போல நடந்துகொள்வது மட்டுமே சிறு குறைபாடு.)
பிற படங்களின் வெட்டித்தனமான ஹீரோ ஜம்பங்களுக்கு மாற்றாக, இதுபோன்று கட்டமைக்கப்படும் நாயக பிம்பங்கள்தான் இளைய தலைமுறையினரின் மனதைச் செம்மைப்படுத்தும் ❤️
இயல்பான கிராமத்து வாழ்வியலின் பின்னணியில் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் படம் முழுசும் காமெடி கலகல 😀
#பில்லா_பாண்டி_வெல்ல_வேண்டியவன்
வித்தகன் S .சேகர்