June 10, 2023

பென்சில் பெட்டி ஓவியம், தொடர் 14 மணி நேர கின்னஸ் சாதனை முயற்சி.

கோவையில் பென்சில் பெட்டி ஓவியம், தொடர் 14 மணி நேர சொற்பொழிவு நிகழ்த்தி அண்ணன், தம்பி கின்னஸ் சாதனை முயற்சி

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் டைமண்ட் விற்பனை நிறுவனத்தின் மேலாளராக உள்ளார்.

சங்கர் -சங்கீதா தம்பதியின் மகன்கள் பிரணவ் (வயது 14), பிரித்துக் (வயது 10) என மகன்கள் உள்ளனர்.

பி ரணவக்க சிறுவயது இருந்து மிருதங்கம் வாசிப்பது, புத்தகங்களை படித்து உரைநடையை மனப்பாடமாக பிறரிடம் ஒப்புவிப்பதில் ஆர்வமாக இருந்தார்.

அவருக்கு தொடர் சொற்பொழிவு, மிருதங்கம் வாசிப்பதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை உருவானது .

இதே போன்று தம்பி பிரித்திவ்க்கு பென்சில் பாக்ஸ் பயன்படுத்தி ஒவியம் உருவாக்குவதில் வல்லவராக இருந்தார்.

இந்நிலையில் உலக சாதனை செய்ய, கின்னஸ் உள்ளிட்ட அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

அதன்படி கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி கலையரங்கில் மாணவர்கள் கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனம், மும்பையில் உள்ள இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உள்ளிட்ட 4 அமைப்பின் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன்படி பிரணவ் காலை 10.30 மணியளவில் விரிவுரையாற்றும் நிகழ்வு என்ற தலைப்பில் தொடர் 14 மணி நேர தொடர் சொற்பொழிவு துவக்கினார்.
ஒய்வு எடுத்து கொண்டு மதியம் 12 மணி முதல் தொடர்ந்தொடங்கி மணி நேரமாக மிருதங்கம் இசைக்கவுள்ளார்.

பிரிதீவ் காலை 11.30 மணியளவில் “பென்சில் பெட்டி ஓவியம் “என்ற தலைப்பில், மரம் பாதுகாப்பை வலியுறுத்தி பென்சில் பாக்ஸ் உருவாக்கினார்.
இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மாணவர் பிரணவ் கூறியதாவது :-
என்னை போன்று பல மாணவர்கள் திறமைகளை வைத்துக் கொண்டு வெளிக்கொண்டு வராமல் உள்ளனர். அவர்களின் திறமைகளும் வெளிவர வேண்டும் என்பதற்காகவும் எனது சிறுவயது உலக சாதனை கனவை நிறைவேற்றவும் இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *