September 25, 2023

பேய் எல்லாம் பாவம்” இசை வெளியீட்டு விழா

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க,  கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக  டோனா சங்கர்
 
மற்றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க,  பிரசாந்த் ஒளிப்பதிவில்  நவீன் சங்கர் இசையில்,  அருண்தாமஸ் படத் தொகுப்பில் ,
 
கதை, திரைக்கதை, வசனத்தை  தவமணி பாலகிருஷ்ணன் எழுத,   தீபக் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் “பேய் எல்லாம் பாவம்”
 
 இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது .
இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு  பேசும்போது, “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது.
 
 இந்த குழுவில் பெரும்பாலும் மலையாளிகள் . தமிழர்களே கம்மி. மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும்,
 
தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம்.  ஆனால் அவர்கள் அப்படி இருப்பது இல்லை . 
 
மலையாள இயக்குனர் கமல் இயக்கிய பிரியாத வரம் வேண்டும் என்ற தமிழ்  படத்துக்கு நான் வசனம் எழுதினேன் .
படக் குழுவில் நானும் இரண்டு உதவி இயக்குனர்களும் மட்டுமே தமிழர்கள் . மற்றவர்கள் எல்லாம் மலையாளிகள் .
 
படப்பிடிப்பு நடந்த ஒரு நாள்  இயக்குனருக்கு பிறந்த நாள் . படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு கேக் வெட்டினார்கள் . எல்லோரும் கலந்து கொண்டார்கள் .
 
ஆனால் என்னையும் அந்த இரண்டு  தமிழ் உதவி இயக்குனர்களையும் மட்டும் அழைக்கவில்லை .
 
காரணம் நாங்கள் தமிழர்கள் என்பதுதான் . மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல வேலை வாங்கினார்கள். 
 
ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. இந்த  இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து  தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த, 
பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். 
 
சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள்.
 
நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள்.  இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
 
இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா ? கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான, 
 
வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு  எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள்” என்றார் 
இயக்குனர் A.வெங்கடேஷ் , “பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது.
 
இப்போதெல்லாம் படம் வாங்குபவர்கள் ,  சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார் 
 
விழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *