சென்னை, வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில், பொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் & தமிழ்நாடு அமைப்பின் சார்பாக 107வது உலக மகளிர் தினவிழா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைப்பின் நிறுவனர்/பொதுச் செயலாளர் இ.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புளியந்தோப்பு சரக காவல்துறை துணை ஆணையர் திருமதி சியாமளா தேவி பி.எஸ்சி., நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைப்பின் தலைவர் லயன் எஸ். மோகன், ஆலோசகர்கள் ஜே.ஜே.மோகன் (குடும்ப நல நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம்) எம்.டி. இளங்கோவன் (தாசில்தார் ஓய்வு), சட்ட ஆலோசகர் டாக்டர் ஹேமபிரியா, வடக்கு பி.ஆர்.ஓ. டாக்டர் லஷ்மிராஜாராம், பி.ஆர்.ஓ. எம்.பழனி, ரஃபிக், போட்டோ கிராபர் முத்து மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.