சென்னை, மார்ச். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கலையரங்கில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி, சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வேளாண்மையில் மகளிர் கருத்தரங்கு துவக்க விழாவையும் மற்றும் மாடித்தோட்டத் தையும் துவங்கி வைத்தார்.தலைமையேற்று மீன் வளத்துறை, பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்ததுறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 6.30 லட்சம் சுய உதவிக் குழுக்கள், 95.02 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் மொத்த சேமிப்பு ரூ.6,839 கோடி ஆகும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலமாக இதுவரை வழங்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் இணைப்பு ரூ.44,452 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6,000 கோடி அளவில் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. 2017-&18ம் நிதியாண்டில், புதிய சாதனையாக பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்ட வங்கிக்கடன் ரூ. 7 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் மகளிருக்கான பொன்னான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான தமிழ் நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி உழைக்கும் மகளிர் வீட்டிலிருந்து தாங்கள் வேலைக்கு செல்லும் பணியிடங்களுக்கு, விரைவாகவும், எளிதாகவும், வசதியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் சென்று வர, முதலமைச்சர் எடப்பா டியாரின் தலைமையிலான அரசு, உழைக்கும் மகளிர்க்கு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை, அம்மாவின் 70வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் துவக்கி வைத்து, இத்திட்டத்தினை வெகுவாகப் பாராட்டிச் சென்றுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் ஏழை, எளிய, நலிவுற்ற, தாழ்த்த ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட, வேலைக்குச் செல்லும் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட அனைத்து மகளிரும் மற்றும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திற னாளிகளும் பயன்பெறு வார்கள். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 3.36 லட்சம் விண்ணப்பங்கள் மாநில அளவில் பெறப் பட்டுள்ளன. 2017-&18ம் நிதியாண்டில், ஒரு லட்சம் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. 14,891 விண்ணப்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, இதுவரை 3,475 அம்மா இரு சக்கர வாகனங்கள் உழைக்கும் மகளிருக்கு வழங்கப் பட்டுள்ளன. வாகனம் ஒன்றிற்கு ரூ.25,000 வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இதுவரை 8.69 கோடி ரூபாய் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடும் இந்த இனிய வேளையில், விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் நோக்கத் துடன், தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், மொத்தம் 10 வட்டாரங்களில் பெண் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டம், 2016-&17 முதல் 60:40 என்ற விகிதத்தில், மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரப் படுகின்றது.
2 மடங்கு உற்பத்தி 3 மடங்கு வருமானம் என்ற இலக்குடன், பெண் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், விவசாய த்தில் உற்பத்தியை அதிகப் படுத்துவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 166 ஊராட்சிகளில், 16,800 பெண் விவசாயிகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 14,800 நபர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம், 3 ஆண்டு காலத்திட்டமாகும். இதன் மொத்த மதிப்பீடு ரூ.15.96 கோடி ஆகும். இத்திட்டம் எதிர்வரும் காலங்களில், பிற மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.
பெண்கள் அதிக அளவில் பங்குகொள்ளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2017-18ல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மூலம், இதுவரை 21.88 கோடி மனிதசக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக ரூ. 3,272 கோடி ஊதியமாக வழங்கி, தமிழகம் இந்திய அளவில் சாதனை படைத்து பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், 40,000 வீடுகள் ரூ. 840 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2016-17 மற்றும் 2017-&18ம் ஆண்டுகளில், மொத்தம் 3,06,552 வீடுகள் ரூ.5,358 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இவ்வீ டுகள் பெருமளவில் பெண்கள் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில், பெண்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தி காத்திடும் வகையில் மகளிருக்கென தனி சுகாதார வளாகங்கள் ஊரகப் பகுதிகளில் இதுவரை 45 லட்சம் தனி நபர் இல்ல கழிப்பறைகளும், நகர்ப்புற பகுதிகளில், 3,83,265 தனிநபர் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில், மேலும், 12.83 லட்ச தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இது தேசிய அளவில் மிகப் பெரிய சாதனையாகும்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும், நகர்ப்புறங்களிலும் காய்கறி, கீரை போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும் என்பதை நிரூபிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தாகவும் இருக்கும் வண்ணம், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாடித் தோட்டத்தை, அன்னை தெரசா மகளிர் வளாக கட்டிடத்தின் மேற்பரப்பில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது. இது அனைவரின் பாராட்டுதலையும் பெற்று, மாடித் தோட்டம் அமைக்க அனைவருக்கும் ஓர் உந்து சக்தியாகத் திகழ்கிறது.
120 பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, முதன்மை பெண் பயிற்றுனர்களாக அவர்கள் மாநில, மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றனர். இதனை பின்பற்றி, தூத்துக்குடி ஆணையர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றின் மேற்பரப்பிலும் மாடித்தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில அளவிலான மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி மையமாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மாவட்ட அளவிலான பயிற்சி மையமாகவும் செயல்படும். விரைவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாடித்தோட்டம் அமைப்பதை வணிக ரீதியாக செயல்படுத்தி வருமானம் ஈட்ட வேண்டும் என்பதையும் நான் கேட்டுக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மேலும் பரவலாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேசினார்.
அதை தொடர்ந்து விவசாய குழு உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு சுழல் நிதியாக தலா ரூபாய் 1,000 வீதம் பத்து நபர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா. வளர்மதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் பிரவீன் பி நாயர், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சத்ய நாராயணன் மற்றும் வி.என்.ரவி, மாநில திட்ட குழும முன்னால் துணைத் தலைவர் சாந்தா ஷீலாநாயர், சி.ராமசாமி மற்றும் மீனாட்சி ராஜகோபால் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவிகுழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
