முதலில் இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு நன்றிகள்எப்படியெனில், எங்கிருந்தோ வரும் ஷெட்டி, ரெட்டி, மேனன் எல்லாம் சாதி போட்டிக்கொள்ளும் போது இந்த மண்ணில் நாங்கள் சாதியை பெயருக்கு பின் போட்டுக்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்புகிறார்.நல்ல கேள்வி பூபதி பாண்டியன் சார். பெரியார் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாய்ப் பெருமைப்பட்டிருப்பார்.பழைய பெருமை குடும்பக் கதை தான். இருந்தாலும் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வினால் புதிதாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர்
- படத்தில் “கயல்” ஆனந்தி தான். சும்மா, தெறிக்க விடுகிறார். இந்தப் பெண்ணுக்கு இப்படியெல்லாம் கூட நடிக்க வருமா? என்று எல்லோரும் கேட்குமளவிற்கு “லொள்ளு” செய்திருக்கிறார். அதே போல “கட்டாயக் கவிஞர்” பூபதி பாண்டியன் எழுதியிருக்கிற இறுதிப் பாடலில் ஆனந்தியின் ஆட்டம் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
அடுத்ததுஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய். முதல்பாடல் தவிர்த்து ஏனைய பாடல்கள் அனைத்தையுமே கேட்கும் விதத்தில் தந்திருக்கிறார். அதே போல சில இடங்களின் இரைச்சலைத் தவிர்த்து பார்த்தால் பின்னணி இசையிலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
நடிகர் விமலுக்கு இதில் தயாரிப்பாளர் என்கிற கூடுதல் சுமை வேறு. முந்தைய அவரது படங்களிலிருந்து பார்த்துவரும் அதே விமல். நிறைய பாசம், நிறை அடிதடி கூடவே நிறைய பேச்சு என கம்ப்ளீட் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், கார்த்திக் குமார் எல்லோருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைவாக நடித்திருக்கிறார்கள். சரண்யா, ஜே பி , நீலிமா ராணி, அப்புறம் மலையாள வாசனையோடு பேசும் அந்த பாட்டி ஆகியோர் , சீமந்தத்துக்கு போக முடியாமல் நாயகியின் அண்ணனுக்கு பயப்படும் காட்சி அருமை .. ரோபோ சங்கர், சிங்கம்புலி.இருவரும் தான் படத்தின் ஆறுதல். குறிப்பாக சிங்கம்புலி, தனக்கு கிடைத்திருக்கிற ஒவ்வொரு இடத்திலும் சரவெடி போடுகிறார். ரோபோ சங்கர் பேசும் பல வசனங்கள் உறுத்துவதாலும், அவர் பேசுகிற இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளி்க்க. வைப்பதாலும் அவரது நல்ல நடிப்பு நமக்கு ஒட்ட மறுக்கிறது. இவர்கள் இருவரைத் தவிர, இரண்டு காட்சிகளில் வந்தாலும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு மொத்தத்தில் காமெடி என்ற ஒரு விசயத்தினால் மட்டுமே இந்த “மன்னர் வகையறா” தாக்குப்பிடித்து நிற்கிறது. மன்னர் வகையறா”ரசிகர்களை குஷிப்படுத்தும்.