முஸ்லிம் பெண்கள் ( திருமண உரிமை பாதுகாப்பு ) மசோதா – 2017″ கடந்த 28-12-2017 அன்று பாராளுமன்றத்தின் லோக் சபாவில் மத்திய பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு , ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் முத்தலாக்கிர்க்கு தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், தலாக் கொடுக்கும் கணவனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை , தொடர்பு இல்லாத யாரும் புகார் கொடுக்கலாம் (cognisable) ஜாமீனில் வெளி வர முடியாத (non bailable offence ) என்ற மசோதாவில் ஷரியதிர்க்கு புறம்பான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . பெண்களுக்கும் . குழந்தைகளுக்கும் முற்றிலும் அநீதி இளைப்பதோடு முஸ்லிம்களின் ஷரீயத்தில் தலையிடுவதாகவும் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள தனி நபர் சட்ட உரிமைகளை பரிப்பதாகவும் இந்த முத்தலாக் மசோதாவான ” முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு ) மசோதா அமைக்கப்பட்டுள்ளது
ஷரியதிற்கு முற்றிலும் புறம்பாக உள்ள இந்த மசோதாவை முஸ்லிம் பெண்கள் வரவேற்பதாகவும், முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்கியதற்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாகவும் பொய்ப் பிரச்சாரத்தை மத்திய பாஜக அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது இந்த பொய் பிரச்சாரத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியாக குரலெழுப்பவும் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கவும் அகில இந்திய அளவில் மாநிலன்தோரும் முஸ்லிம் பெண்களின் மாபெரும் பேரணி & பொது கூட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு கட்டமாக “தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு” சார்பாக மாபெரும் அமைதியான எதிர்ப்பு பேரணி – பொதுக்கூட்டம் சென்னையில் 17.03.2018ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.