September 24, 2023

மேற்குத் தொடர்ச்சி மலை. விமர்சனம்

 

விஜய் சேதுபதி புரடக்சன்ஸ்

சார்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் , ட்ரீம் ட்ரீ புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா,

ஆறு பாலா, அபு வலயங்குளம் ஆகியோர் நடிப்பில்  இளம் இயக்குனர் லெனின் பாரதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை .

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தேவாரம் கிராமத்தில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் ரங்கசாமிக்கு  (ஆண்டனி), 

ஆறு பாலா, அபு வலயங்குளம் ஆகியோர் நடிப்பில்  இளம் இயக்குனர் லெனின் பாரதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை . படம் பார்த்தேன் மிகவும் எதார்த்தமான நம் வாழ்க்கை சொல்லும் படம் படத்தின் கதை காணி நிலம்வேண்டும் என்று பாடிய பாரதியாரை நினைக்க தோன்றியது.சம்பாதிக்கும் பணத்தை சேமித்து ஒரு சிறிய இடத்தை வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்கிறார். மலை அடிவராத்திலிருந்த   மலைக்கு மூட்டை சுமந்து கூலிக்கு தொழிலாளி வேலைகளை யார் கொடுத்தாலும் செய்து முடிப்பார் அப்பாவி தனமான மனிதராக ஊர் வேலைக்காரனவாழ்கிறார் மலையில் விலையும் ஏலக்காய் மூட்டையை சுமக்கும் கூலி வேலை செய்கிறார் தனக்கு நிலம் வாங்க முயற்ச்சிக்கும் போது தடங்கள்  பிரச்சனை வருகிறது

மலைப்பாதையில் கடை வைத்து வாழும் ஒரு பாட்டி , அப்பா அம்மா இல்லாத தன் பேத்தியின் கல்யாணத்துக்காக,  

தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முயல்கிறார் . அதை முடிந்தவரை கம்மியான விலைக்கு ரங்கசாமிக்கே கொடுக்க முன் வருகிறார் . 

ஒரு கட்டத்தில் தான் வேலை பார்க்கும் முதலாளிடம் தான் சேர்த்து வைத்த இருந்த பணத்தை கெடுத்து ஏலக்காய் மூட்டை வாங்கி வியாபாரம் செய்து  ஏலக்காய் மூட்டையை வாங்கி அதை விற்று லாபத்தில் நிலம் வாங்க முற்படுகிறார். மூட்டையை சுமந்து வரும் போது எதிர்பாராத விதமாக மூட்டை மலையிலிருந்து உருண்டு விழுந்து விட பெரிய துன்பத்தில் ஆளாகிறார் இதை அறிந்த ஊர் பெரியமனிதர் அவனுக்கு உதவ முன்வந்தார்அந்த நிலத்தை இலவசமாக வாங்கி கொடுக்க வாங்க மறுக்க கடனாக பெற்றுக் கொண்டான்  நிலத்தை வாங்கும் ரங்கசாமி விவசாயம் செய்தாரா? எதிர்பாராத விதமாக ரங்கசாமி ஜெயிலுக்கு போகும் காரணம் என்ன? கடனால் ரங்கசாமியின் குடும்பம் என்ன ஆனது? மூட்டை தூக்கும்கூலி தொழிலாளி வாழ்க்கை முன்னேற  முயற்ச்சி கேள்வியாக உள்ளது ? ரங்கசாமி ஆண்டனி மலைவாழ் மக்களாக இருக்கிறார்                    

கிராமத்து பெண் ஈஸ்வரியாக காயத்ரி கிருஷ்ணா மாமா ரங்கசாமியை கிண்டல் செய்து பின்னர் திருமணம் செய்து கொண்டு இன்பத்திலும், துன்பத்திலும் குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் யதார்த்தமான இயல்பான நடிப்பு அற்புதம்

 இயக்குனர் லெனின் பாரதிக்கு  வாழ்த்துக்கள்  மலைவாழ் இல்லை மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை போராட்டம் உனர்வுகள் எதார்த்தமான பேச்சு இவற்றை கண் முன் கொண்டுவந்து காட்டிய உள்ளனர் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான மேற்கு தொடர்ச்சி மலை அனைவரும் பார்த்து கொண்டாடப்பட  அவர்களை என் மன
மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் இயக்குனர் லெனின் பாரதிக்கு  வாழ்த்துக்கள்இசை இசைஞானி இளையராஜா அற்புதம்இசையமைத்துள்ளார்
 ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மலையின் இயற்கை அழகை அப்படியே கொடுத்துள்ளார்  இதில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர் பாராட்டுக்கள். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கார்கள் நம்தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டிய படம்

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *