October 3, 2023

மே 11 ல் வெளிவரும் ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

 
நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது!    
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதா நாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடி யாக அமலாபால்  நடி க்கிறார்.
 
இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,
 
வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி  நடிக்க ,  சித்திக் இயக்கியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.
 
அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
 
இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
 
“அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் “திரைப்படம்  ஆங்கிலம்  மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.
 
இதனால் பெரிய  பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படத்துக்கு  முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின்  பற்றாக்குறை ஏற்பட்டது .
 
எனவே எல்லா  பகுதிகளிலும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்படத்தினை மே மாதம் 11 ஆம்  தேதியன்று வெளியிட  படக்குழு திட்டமிட்டு உள்ளனர் .
 
 பரதன் பிலிம்ஸ்  இந்தப் படத்தை  தமிழகம் முழுவதும்  வெளியிடுகிறது . 
 
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன் பேசும்போது ,” திருச்சி பரதன் பிலிம்ஸ்  உரிமையாளர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றார் .
 
அதனால் பல்வேறு  தடைகளையும் தாண்டி  மே 11 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அரவிந்த் சாமி மாதிரி நடிகர்கள் இருந்தால் போதும் தயாரிப்பாளர் முருகன் போன்றோர்களுக்கு மிக பெரிய பலமாக இருக்கும்.
 
அரவிந்த் சாமி அவர்களுக்கும்,திரு விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்
 
நடிகர் ரமேஷ் கண்ணா தன் பேச்சில், ” அரவிந்த்சாமி அவர்கள் எங்களுக்காகவும் இந்த படத்திற்காகவும் நிறைய விட்டுக் கொடுத்து இருக்கிறார்.
 
முன்பணம் கூட வாங்கவில்லை.உண்மையிலேயே அவரைப் பாராட்ட வேண்டும். படம் பல தடைகளை தாண்டி வெளிவருகிறது.
 
படத்தில் உள்ள அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.கண்டிப்பாக  இந்த படம் மாபெரும் வெற்றியடையும்.”  என்றார் 
 
 அரவிந்த்சாமி பேசுகையில்,
” அனைவரும் பேசியதுபோல படம் பல தடைகளைத் தாண்டி வெளியாக இருக்கிறது.படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. 
 
ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார். சூரி,ரோபோசங்கர்,ரமேஷ் கண்ணா ஆகியோர் அருமையான நகைச்சுவைக் காட்சிகளைக் கொடுத்துளளனர்.
 
நைனிகா ,ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார்.
 
அம்ரேஷ் இசை,சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது. விஜயன் அவர்களுடைய 500 வது படம் இது  .
 
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். படம் மே 11 ரிலீஸ் ஆகிறது,கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார் 
 
தயாரிப்பாளர் முருகன் தனது நன்றி உரையில், ” இந்தப் படம் தமிழகமெங்கும் வெளியாகக் காரணமாக இருக்கும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
நடிகர் அரவிந்த்சாமி மிகப்பெரிய உதவியாக இருந்தார்.இயக்குனர் சித்திக் அவர்களுக்கும் , படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பல தடைகளைத்  தண்டி மே 11 ரிலீஸ் ஆகிறது” என்றார் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *