November 29, 2023

ராஜ் டிவி இல்ல திருமண விழா

ராஜ் டிவி இல்ல திருமண விழா


ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் எம்.ராஜரத்தினம்-திருமதி அருணாதேவி தம்பதியின் மகன், தொழிலதிபர் சின்ன நாச்சியப்பனுக்கும்,செல்லப்பா-சுஜாதா தம்பதியினரின் மகள் டாக்டர் ராஷ்மிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டர் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் அனுப்பிய வாழ்த்து மடலை, மக்கள் தொடர்பு அதிகாரி தங்கையன் நேரில் வழங்கினார்.

மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவரது செயலர் ராஜகோபால் ஆகியோர் நேரில் வாழ்த்தினர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் செங்கோட்டையன்,ஆர்.பி.உதயகுமார்,எம்.சி.சம்பத்,வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன்,டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். காலையில் நடந்த திருமணத்தின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மணமக்களை வாழ்த்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,பொருளாளர் துரைமுருகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு,மா.சுப்பிரமணியன்,தமிமுன் அன்சாரி,தனியரசு ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,மதிமுக பொதுச்செயாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்,பிஜேபி மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், அதிமுக நிர்வாகி ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.

தினந்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், போத்தீஸ் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ்,நல்லி குப்புசாமி,தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷம்,வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழக வ.உ.சி நலப்பேரவை பொதுச் செயாளர் கே.குமார் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்தினர்.

தமிழக காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன்,கூடுதல் டிஜிபி ரவி,ஷகில் அக்தர், சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன்,செய்தி துறை இயக்குநர் சங்கர்,சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மணமக்களை வாழ்த்தினர்.

திரைப்பட நடிகர்கள் சூர்யா, ஜீவா, ஸ்ரீகாந்த்,விஜயகுமார்,பிருத்விராஜ், ராஜேஷ்,ரமேஷ்கண்ணா,நடிகைகள் ராதிகா சரத்குமார், ப்ரீத்தா ஹரி, சச்சு, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,பாக்யராஜ்,பாண்டியராஜன்,கே.எஸ்.ரவிக்குமார்,திரையரங்க உரிமையாளர்கள் அபிராமி ராமநாதன்,பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.

சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு,பிரமிட் நடராஜன்,சத்யஜோதி தியாகராஜன்,ஏ.எல்.அழகப்பன்,பி.எல்.தேனப்பன்,சித்ரா லட்சுமணன்,பாலு,இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவியும்,பாடகியுமான சைந்தவி உள்ளிட்ட பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

விழாவுக்கு வந்த அனைவரையும் ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன், இயக்குனர்கள் எம்.ராஜரத்தினம்,எம்.ரவீந்திரன்,எம்.ரகுநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த செய்தியையும், படங்களையும் தங்கள் மீடியாவில் வெளியிடுமாறு அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள

ஜி.பாலன்

மக்கள் தொடர்பாளர்

ராஜ் தொலைக்காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *