November 28, 2023

ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” ; இயக்குனர் வ.கௌதமன் கேள்வி..! உயிர்கொடு காவிரி’ ஆல்பம் வெளியீடு

ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” ; இயக்குனர் வ.கௌதமன் கேள்வி..! உயிர்கொடு காவிரி’ ஆல்பம் வெளியீடு

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி பரபரப்பு பேச்சு…!இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு எதிராக போராடுவதுதான் பாரதிராஜாவின் வேலையா..? ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி ஆவேசம்..!
 
“மணல் அள்ளும் ஸ்லீப்பர்செல்கள் யார்” ; ‘காவிரி’ ஆல்பம் மூலம் உண்மையை உடைத்த இயக்குனர் ராகேஷ்..!
 
“யார் தலைவர் என தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்” ; அபிசரவணன் ஆதங்கம்..!
 
“போராட்டங்களை திசைதிருப்புவதன் பின்னணியில் சென்சார் போர்டு” ; இயக்குனர் மீரா கதிரவன் பகீர் குற்றச்சாட்டு..!
 
காவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..!
 
“விவசாயிகள் லாபம் பெற இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும்” ;  இந்திரா புராடக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன்..!
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற் போது காவிரி விழிப்புணர்வு குறித்து‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர் கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்ப மாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக் கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறை ந் திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்த ப்பா டலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
 
 
இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ் பேசும்போது,
 
“தஞ்சாவூர், பட்டு க்கோட்டை பகுதிகளில் பயணிக்கும்போது ஒருகாலத்தில் அங்கே பசுமையாக இருந்த நிலங்கள் இன்று வறண்டுபோய் கிடப்பதை பார்க்கும்போது, அந் தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில்  ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப் போதும் கூட அங்கே மண் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகேம் வைத்து படமாக்கும்போது அதை கல்லெறிந்து உடைத்தார்கள், ஸ்லீப்பர் செல்போல அந்த ப்ப குதியில் சிலர் இருக் கிறார்கள். இதை யாருக்காக செய்கிறோம் என அவர்களுக்கு தெரி யவில்லை.. ஆனால் தாங்கள் செய்வது தப்பு என அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. காவிரிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அது கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது, விவசாயிகளின் வலி, வேதனையை இந்த ஆல்பத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *