April 1, 2023

ரூ1.38 கோடி மதிப்பில் களிறு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட சாடிவயல் பகுதியில் களிறு திட்டத்தின் சார்பாக செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் வனப்பாதுகாவலர் திரு.இராமசுப்பிரமணியம் அவர்கள் களிறு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் வனத்துறை வனக்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்திகளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து கோவை மண்டல வன்ப்பாதுகாவலர் அவர்கள் தெரிவிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 7வனச்சரக பகுதிகளில் வனத்துறை மூலம் மனித வனவிலங்கு மோதல்களை தடுக்கும் வகையில் ரூ1.38ஃ- கோடி மதிப்பில் களிறு எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 45 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளிலுள்ள மலைவாழ் மக்கள் மற்றும் வனபகுதியொட்டியுள்ள மக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகவன ஆர்வலருகளுக்கு வனக்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது,

மனித – வனவிலங்கு மோதல்களை தவிர்க்க வனத்துறை வனபகுதிகளில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்துதல், கிராமங்களின் உள்ளே வனவிலங்குகள் புகாதவாறு அகழிகள் ஏற்படு;த்துதல் போன்ற சிறப்பான பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அகழிகளில் பாதிப்புக்கு உண்டான பகுதிகளில் வனவிலங்குகளை தொடர்ந்து கண்கானிக்க அப்பகுதிகள் தெர்மல் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை வனவிலங்குகளின் நடமாட்டத்தினை கண்டறிய இயலும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை பகுதியில் தெர்மல் கேமரா பொருத்தப்படவுள்ளது. மேலும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனத்துறை களப்பணியாளர்கள், வனக்குழு உறுப்பினர் இணைந்து ஒரே குழுவாக ஏற்படுத்தப்பட்டு மனித வனவிலங்கு மோதல்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள 105வனவிலங்குகளுக்கான நீர்தோக்கத் தொட்டிகளில், 78 நீர்தேக்க தொட்டிகள் புணரமைக்கப்பட்டு 7 நாட்களுக்கு ஒருமுறை நீர் நிரப்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகளின் நீர்தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதால் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனபகுதியொட்டியுள்ள கிராமங்களில் நுழைவது தடுக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் பரிசார்த்த முறையில் ரூ.10ஃ-லட்சம் மதிப்பிட்டில் வனவிலங்குகளுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 10 ஹெக்டர் பரப்பளவில் வனவிலங்குகளுக்கான பயிர்கள் பயிரடப்படுகிறது,

மேலும், வனப்பகுதி, வனப்பகுதியொட்டிள்ள குடியிருக்கும் மக்கள் தங்கள் கழிப்பிடத் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தனிநபர் கழிப்பிடத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வனவிலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் பயிர்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கான இழப்பீடுகளை எவ்வித தாமாதமின்றி பெறுவதற்கு தமிழகத்திலே முதன் முறையாக பரிசார்த்த முறையில் ஆன்லைனில் பதிவுசெய்யும் முறை பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பிடு வழங்கப்படுவதுடன், நேர விரயமும் தவிர்க்கப்படுகின்றது.

சாடிவயல் பகுதிகளில் 2012 ஆண்டு யானைகள் முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இம்முகாமில் தற்போது வரை பாரி(வயது 36), சுஜய்(வயது 47) என்ற இரண்டு கும்கி யானைகள் மூலம் காட்டுயானைகள் விரட்டும் பணிகளும், மனித-வனவிலங்கு காப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்சமயம், சுழற்சி முறையில் பாரி, சுஜய் ஆகிய இரண்டு யானைகளும், சாடிவயல் முகாமிலிருந்து முதுமலை மற்றும் ஆனைமலை முகாமிற்கு மாற்றபடுவதாவும், அதற்கு பதில் சாடிவயல் யானைகள் முகாமிற்கு சேரன்(வயது 31), ஜான்(வயது 26) என்ற 2 கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்படுகிறது என கோவை மண்டல வனப்பாதுகாவலர் திரு.இராமசுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு.சதிஷ் இ.வ.ப., வனத்துறை கால்நடை மருத்துவர் திரு.மனோகரன், வன சமூக நல ஆர்;வலர்கள், வனபாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *