சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில், ரோட்டரி கிளப் ஆப் செக்டரம் ‘சூட் அவுட்’ கூடைப்பந்து விளையாட்டு போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான 17.11.2018, 18.11.2018 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றது. இதில் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்பது அணிகளாக விளையாடி வருகின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக திலிப் ராஜ், தலைவர் பாரா ஒலிம்பிக் அசோசியேசன் தமிழ்நாடு மற்றும் ஹரிஹர சுதன் பொது மேலாளர் குளோபல் லாஜிஸ்டிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதிப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
