வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர்,
ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை.


நமக்கு எந்தமாதிரியான புரிதலை தருது என்ன சொல்ல வருது அப்படின்னு சில விசயங்கள் மனசைக் குடையுது. ஆனா இப்போ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏன்னா படமும் இன்னும் முடிவுக்கு வரவில்லை இல்லயா? இன்னும் இரண்டு பாகம் இருக்கே..
படத்தில் யாரும் நல்லவர்களாகவே காட்டப்படல. கத்தியை கையில் எடுக்குறது எதோ கடலை மிட்டாயை எடுக்குற மாதிரி எல்லாருக்கும் சாதாரணமா இருக்கு. வயசுக்கு வந்த பொட்டபிள்ள வாயில வர்ற எல்லா கெட்டவார்த்தைகளையும் சாதாரணமா பேசது. கொள்ளை அடிக்கிறதுன்னா ஊரே கொள்ள பிரியமா இருக்குது. இப்படியான விசயங்கள் படம் முழுதும் பரவிக் கிடக்கு. அதனால் இந்தப்படம் வடசென்னை மக்கள் மீது மோசமான எண்ணத்தை விதைச்சிடும் அப்படின்னு ஒரு விமர்சனம் இருக்கு. தனுஷ் நடிப்பு எதார்தம் நல்லா இருந்தது உடன் நடித்த அனைவரும் ஓகே சூப்பர் அமீர் நடிப்புமனதில் நின்றார் வென்றார் நடிகைஆண்ட்ரியா வில்லியாக சரியானகேரட்டர் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் பாராட்டு இய க்குனர் வெற்றி மாறன் முயற்ச்சி பாராட்டலாம் .