விவசாயப் பொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கக் கோரி விவசாய கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…..
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மான்,மயில்,யானை, குரங்கு, காட்டுப்பன்றி, காட்டெருமை வன விலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களையும், மனித உயிர்களையும் காப்பாற்ற வன விலங்குகள் விவசாய பொருட்களை நாசம் செய்வதாகவும், இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும்,
விவசாய கடன் தள்ளுபடி, பஸ் கட்டணம், டீசல், பெட்ரோல் விலை உயர்வை கைவிடக் கோரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் டி.வேணுகோபால், மாவட்ட பொருளாளர் ஜி.கிருஷ்ணசாமி, தொண்டாமுத்தூர் தலைவர் பசுவைய்யா, டி.வேலுசாமி, சட்ட ஆலோசகர் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில பல மாவட்டங்களில் இருந்து 500-க்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டனார்.