November 28, 2023

வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சமந்தா தனது காட்சிகளை முழுவதுமாக நடித்து முடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி படத்திற்கான டப்பிங் பணிகளையும் சமந்தா துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார். வருகிற அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *