ஸ்டெர்லைட் செம்பு உருக்காலை மூடலால் பாதிக்கப்பட்ட உடன் குடி பகுதி மக்கள் இன்று (30.8.2018) சென்னை வந்தனர். கடற்கரை அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் அரசக்கான மனுவோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் ஊர்வலமாக கோட்டைக்கு சென்று முதலமைச்சர் அலுவலகத்தில், மனு ஒன்றை அளித்தனர்.தூத்துக்குடி வாழ் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம், ஸ்டெர்லைட் ஆலையின் மூடலால் பாதிக்கப்பட்டிருப்பதையும், விவசாய உர விலை ஏற்றம் கண்டதையும் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர். எந்த எதிர்பார்ப்புமின்றி ஸ்டெர்லைட் நிறுவனம் உடன் குடி கால்வாயை சுத்தப்படுத்தும் பணியை துவங்கி இருப்பதை நன்றியோடு ஊர் மக்கள் உரைக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் தட்டுபாட்டு ஏற்பட்டுள்ளதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரின் தனிபிரிவில் மனு அளித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிபிரிவில் மனு அளித்த பின்னர் தூத்துக்குடி மாவட்ட உடன்குடி வட்டார விவசாய சங்க தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு தேவையான டிஏபி உரங்களை ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு நாங்கள் வாங்கி வந்தோம். தற்போது ஸ்பிக் நிறுவனத்தால் உரம் வழங்க முடியவில்லை. இதற்கு காரணமாக உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் சல்பியூரிக், பாஸ்பிரிக் ஆசிட் ஆகியவை ஸ்டெர்லைட் ஆலையிடம் வாங்கி டிஏபி உரத்தை ஸ்பிக் நிறுவன தயாரித்து வந்தது.தற்போது ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியத்தை நிறுத்தி உள்ளதால் உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆகவே உரம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி அளித்து அதன் மூலம் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.உடன்குடி வட்டார் பசுமை ஆர்வலர்கள் நலசங்க பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறுகையில்: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டத்தில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகளை சமூக அக்கறையோடு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் தூர்வாரி வந்தது.
இந்த ஆலையை தற்போது மூடப்படமால் தடைப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வரப்படாமல் நீரின்றி உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், பல்லாயிரம் தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து வருகிறது. ஆகவே நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டுள்ளதால் நேரடியாக, மறைமுகமாக பல்லாயிரகணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஆகவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பு பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய நினைவிடங்களில் 20-க்கும் மேற்பட்ட தூத்துக்குடி உடன்குடி வட்டார விவசாயி சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர்.