கோவை சுந்தராபுரத்தில் உள்ள குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பொங்காளியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு,கணபதி ஹோமம்,
கொடியேற்றத்துடன் துவங்கி குறிச்சி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் மற்றும் தீர்த்த குடம் புறப்பட்டது.
பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் கோவிலை ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
பின்னர். அம்மனுக்கு விஷேச அபிஷேக பூஜைகள் மற்றும் மதியம் பொங்காளியம்மனுக்கு இளநீர், தேன், பால், சந்தனம் உட்பட, 18 திரவியங்களால் அபிஷேகம் அதன்பின், மலர் மாலைகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி இனண அமைப்பாளர் வி.ஆறுமுகப்பாண்டி சமூக சேவகர் மற்றும் குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 1000-த்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி