ஹாலிவுட் தரத்தில் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸுடன் மேக்கப் அப் கலை (A-Zone Academy)
இன்றைய உலகில் திரைத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ், ப்ராக்டிகல் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ், அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர் அண்ட் ப்ராப்ஸ் போன்ற துறைகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன என்றும், இதனை மாணவர்களும், இளைய தலைமுறையினரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு அழைத்துச் செல்ல இயலும் என்கிறார் ஏ ஸோன் அகாடமியின் நிர்வாக இயக்குநரான சுதாகர்.



இது குறித்து அவர் விரிவாக பேசுகையில்,‘
இன்றைக்கு தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு இணையாகவும், ஒரு சில படங்கள் ஹாலிவுட் தரத்தை விட மேலானதாகவும் இருக்கிறது. இதற்கு ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் ப்ராக்டிகல் எபெஃக்ட்ஸ் ஆகிய துறைகளின் முக்கி யத்துவமும், இந்த பிரிவில் அறிமுகமாகியிருக்கும் நவீன தொழில்நுட்பங்களும் தான் காரணம். ஆனால் இந்த விசயத்திற்காக நாம் இன்னும் ஹாலிவுட் கலைஞர்களையும், ஹாலிவுட் ஸ்டூடியோக்களையும் தான் நம்பியிருக்கிறோம்.
அதே சமயத்தில் இது போன்ற தொழில்நுட்பங்களை கற்பிக்கும் தனியார் நிறுவனங்களும் பெரிய அளவில் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ இல்லை. அதனால் இத்தகைய துறை சார்ந்த கல்விகளை பயிற்சியுடன் அளிக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதே சமயத்தில் இத்தகைய பயிற்சிகளை குறுகிய கால பாடதிட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தேன். ஏனெனில் இத்துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக 3 டி மாடலிங் அண்ட் அனிமேஷன், மேட்ச் மூவிங் அண்ட் கேமரா ட்ராக்கிங், காட்மபோசிட்டிங் அண்ட் விசுவல் எபெக்ஃட்ஸ் போன்ற ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ் பிரிவில் பணியாற்றுவதற்றும் கலைஞர்கள் குறைவு. மூன்றே மாதத்தில் நாங்கள் எங்களுடைய மாணவர்களை இந்த பிரிவில் முழுமையான அளவிற்கு தயார் படுத்துகிறோம்.
மூன்று மாத பயிற்சியில் இறுதியில் அவர்கள் உருவாக்கும் டெமோ ரீல் என்பது அவர்கள் இத்துறையில் சாதிப்பதற்கான ஒரு நுழைவாயிலாகவே இருக்கும். அதனை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இந்த துறையில் அறிமுகமாகியிருக்கும் லேட்டஸ்ட் சாப்ட்வேர்களையும், அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும், இயக்குநரால் படமாக்கப்பட்ட ஷாட் ஒன்றில் எப்படி ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ்களை சாமர்த்தியமாக கற்பனை வளத்துடன் இணைக்க இயலும் என்பதையும் கற்பிக்கிறோம்.

அதே போல் இன்றும் நம்முடைய தமிழ் சினிமாவில் ஏதாவது வித்தியாசமான கேரக்டருக்கான மேக்கப் என்றால் உடனே ஹாலிவுட் கலைஞர்களை நாடுகிறோம். அந்த துறையிலும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். இதனை ப்ராக்டிகல் ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ் என்பார்கள். அத்துடன் மினியேச்சர் மற்றும் அதற்கான பொருட்களை உருவாக்குவதில் உள்ள தொழில்நுட்பத்தையும் கற்பிக்கிறோம். அதே போல் டைனோசர், ராட்சத பல்லி போன்ற மிகப்பெரிய விலங்குகள் மற்றும் உருவங்கள் போன்றவற்றை திரையில் நகரும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும் என்றால் அதற்கு அனிமேட்ரானிக்ஸ் என்ற பிரிவில் வல்லவர்களாக இருக்கவேண்டும். அதனையும் நாங்கள் கற்பிக்கிறோம். இந்த மூன்று பிரிவுகளையும் இணைத்து ஒரு பேக்கேஜாகவோ அல்லது தனித்தனியாகவோ மூன்று மாதங்களில் கற்பிக்கிறோம்.

இங்கு பயிற்சிப் பெறும் மாணவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பயிற்சி முடிந்த பிறகு சான்றிதழ் அளிக்கிறோம். அத்துடன் அவர்களுக்கான பணிவாய்ப்பினையு நாங்களே ஏற்படுத்தி தருகிறோம். எதிர்காலத்தில் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஸ்பெஷல் விசுவல் எபெஃக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறவிருக்கிறது. அதற்காக நாங்கள் 50 சதவீத கட்டணச்சலுகையுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறோம். இதனை பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக பணியாற்றும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கவேண்டும்.
அதே சமயத்தில் இந்த இரண்டு துறைகளிலும் தேர்ச்சிப் பெற்றவர்கள் திரைத்துறையில் தான் பணியாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களுக்கு விளம்பரத்துறை, மருத்துவ துறை, கட்டுமானத்துறை போன்ற துறைகளிலும் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. அங்கும் இவர்கள் தங்களின் திறமையை காட்டு வாழ்க்கையில் சாதிக்கலாம்.
அடு த்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தை கற்பிக்க நாங்கள் தயாரா க இருக்கிறோம். ஆர்வத்துடனும்,கற்பனை வளத்துடனும் வாருங்கள். பயிற்சி பெற்று சாதனையாளர்களாக உயருங்கள்.’ என்றார்.
கட்டணம், சலுகை, பயிற்சி நேரம் உள்ளிட்ட பல விவரங்களை அறிய contact@azoneacademy.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 0091 8939797472என்ற எண்ணுடனோ அல்லது www.azoneacademy.com என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
‘சினிமாவில் பணியாற்றவேண்டும் என்றால் இது போன்ற தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கற்பனையை நவீன தொழில்நுட்பத்துடன் சரியான விகிதத்தில் கலப்பவர்களே வெற்றிப்பெறுவார்கள் என்பதை உணரும் அனைவரும் ஒரு முறை இங்கு தவறாது வருகை தந்து இவர்கள் அளிக்கும் பயிற்சியைப் பெற்றால் முழுமையான படைப்பாளியாகலாம் ’ என்கிறார் இந்த பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் இளம் படைப்பாளிகள்