சென்னை, மே 14:- 2018:- மிகச் சிறந்த மருத்துவம் மற்றும் உடல் நலப் பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரத்த நாளங்களுக்கு இடையேயான மின் ஒலி வரைவி பகுப்பாய்வுப் படம் எடுத்தலின் உதவியுடன் துல்லியமான அகநாள உட்சிகிச்சை (இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (ஐவியுஎஸ்) இமேஜிங் கைடட் ப்ரெசிஷன் ஆன்ஜியோபிளாஸ்டி) தொடர்பான பயிலரங்கம் நடத்தப்பட்டது. உலகின் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணரான இத்தாலியின் பெடெர்சோலி மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவு இயக்குநர் டாக்டர் இமாத் ஷெய்பன் முன்னிலையில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது. புதிய தொழில்நுட்பம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த புதிய முறை நோயாளிகளுக்கும் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் எந்த அளவு பயன் அளிக்கிறது என்பது குறித்து விளக்கவும் இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. இந்த ஒருநாள் கருத்தரங்கில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்கள் என்று அழைக்கப்படும் ஆன்ஜியோகிராம் மற்றும் ஆன்ஜியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி எனப்படும் ஆன்ஜியோபிளாஸ்டி முறையில் இமோஜிங் கைடட் ப்ரெசிஷன் ஆன்ஜியோபிளாஸ்டி, ஐவியுஎஸ், ஓடிசி, சிடிஓ போன்ற தொழில் நுட்பங்கள் தொடர்பாக இந்த ஒரு நாள் பயிலரங்கில் விரி்வாக விவாதிக்கப்பட்டது.
இத்தாலியி்ன் துரின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெடெர்சோலி மருத்துவமனையில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் இயக்குநராக உள்ள டாக்டர் இமாத் ஷெபியென் இந்தப் பயிலரங்கத்தை நடத்தினார். சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி நிபுணர் ஆனந்த் ஞானராஜ், உள்ளிட்டோரும் இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றினர். இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறையில் சமீபத்திய புதிய முன்னேற்றங்கள் குறித்து வி்ளக்க இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. குறிப்பாக குறிப்பாக இமேஜிங் கைடட் பிரெசிஷன் ஆன்ஜியோபிளாஸ்டி மற்றும் சிக்கலான கார்டியாக் இன்டர்வென்ஷன் குறித்து இதில் விளக்கப்பட்டது.
இதய ரத்தக்குழாய் நோய் எனப்படும் கார்டியோ வாஸ்குலர் நோய்கள் உலக அளவில் 31 சதவீத மரணங்களுக்குக் காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் இந்நோயால் சுமார் 75 லட்சம் மக்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் 74 சதவீதம் பேர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தில் உள்ளனர். ரத்தக் குழாய் தமனியில் (கரோனரி ஆர்டெரி) மாரடைப்பு ஏற்பட்டால் அது ஆன்ஜியோகிராபியில் தெரிய வராது. இயல்பாக உள்ளதாகவே ஆன்ஜியோகிராபியில் காட்டும். ஆனால் நவீன இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் முறையில் முடிவான மற்றும் துல்லியமான தகவல் கிடைக்கும். சாதாரண இரட்டை பரிமாண இமோஜிங் ஆன்ஜியோகிராபியில் அடைபட்ட ரத்தக் குழாய் தமனி முழுவதும் இயல்பாக இருப்பதாகவே காட்டும். ஆனால் அந்த பகுதியை குறுக்கு வெட்டாக இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் மூலம் ஆய்வு செய்யும்போது துல்லியமான மற்றும் தெளிவான படம் கிடைக்கும். சிறப்பாகவும் துல்லியமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்தத் தகவல் அறுவை சிகிச்சை மருத்துவருக்கு பயனுள்ளதாக அமையும்.