GOOSEBUMPS 2: HAUNTED HALLOWEEN
(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)
வெளியீடு – அக்டோபர் 26
Goosebumps என்றால் சிலிர்ப்பு எனப் பொருள்படும். அத்தகைய ஒரு ‘சிலிர்ப்பை’, மெய்யானதொரு ‘மெய்சிலிர்ப்பை’ப் படம் பார்ப்போரது உள்ளத்திலும் உடலிலும் உருவாக்கிய ஒரு திரைப்படம், 2015இல் வெளியான ‘Goosebumps’! வசூல் ரீதியாகவும் அப்படம் மிகப் பெரிய வெற்றியை எய்தியது!

மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர் சங்கிலியாக இந்த இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது!
தி ப்ராஸ் பாட்டில் (The Brass Bottle, 1964; தமிழில், பட்டணத்தில் பூதம், 1967), ப்ளாக் பியர்ட்ஸ் கோஸ்ட் (Black Beard’s Ghost, 1968), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps, 2015) போன்ற படங்களில் முறையே ஜாடியிலிருந்தோ, மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ முறையே ஒரு பூதமோ, விசேட குணாதிசயங்களும் விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் உயிர்த்தெழுந்து உலா வரும் அதி அற்புத காட்சிகளைப் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம்! புத்தம்புதியதாகப் புதுப்பொலிவுடன் பவனி உலா வருகிறது, கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன்.
இப்போது கதைக்கு வருவோம்:
வார்டன் க்லிஃப் என்கிற ஒரு சிறிய ஊரில், சோனி க்யூன் (ஜெர்மி ரே டெய்லர்) மற்றும் சாம் கார்டர் ஆகிய இருவர், ஆர்.எல்.ஸ்டைன் (ஜாக் ப்ளாக்) என்பவருக்குச் சொந்தமான பழைமையானதொரு மாளிகையில், ஹாண்டட் ஹாலோவீன் என்கிற ஒரு புராதன புத்தகமொன்றைக் காண்கிறார்கள். பக்கங்களைப் புரட்டும் போது ஸ்லாப்பி (அவெரிலீ) என்கிற ஓர் உயிரினத்தைத் தெரியாத்தனமாக வெளியேறி விடச் செய்கிறார்கள்! நாசவேலைகளில் இறங்க முற்படும் அதனைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சோனி, சாம், ஸ்டைன் மற்றும் சோனியின் சகோதரி சாரா க்யூன் (மெடிசன் இஸ்மேன்) ஆகிய அனைவரும் இணைந்து செயல்களத்தில் குதிக்கிறார்கள்!
ஆரி சாண்டல் இயக்க, டாமினிக் லூயிஸ் இசையமைத்துள்ளார். பேரி பீட்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி பிக்சர்ஸ் (Sony Picture) நிறுவனத்தின் தயாரிப்பு இப்படம்