கோவை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்பாக கோவை பிரஸ் கிளப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறிகையில்
மானியம், இலவசம், கடன், கடன் தள்ளுபடி, காப்பீடு, நிவாரணம் போன்றவற்றால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியாது. ஊதிய கமிட்டி பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்துவது போன்று விவசாயக் கமிட்டியின் பரிந்துரையையும் ஏற்று அரசு செயல்படுத்தினால் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் கூறியது போன்று விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க yமுடியும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க இருப்பது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். காவிரி நீருக்காக தமிழகம் யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போன்று நாள்தோறும் நதிநீர் பங்கீடு என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் 58 சதவிகிதம் விவசாயத் தொழில் இருக்கும் நிலையில், பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்வது என்பது விவசாய விரோதப்போக்கு.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழில்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து உணவுமுறை மாற்றம், பயிர்முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பருவநிலை மாற்றம், மக்கள் தொகைக்கு ஏற்ப இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் விவசாயத்தை மேம்படுத்தும் திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என கூறினார்.