November 29, 2023

அரசியல் த்ரில்லரா ‘செங்களம்’ தொடர்?செங்களம்*(வெப் தொடர் ) விமர்சனம் .

தயாரிப்பு – அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட் இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன் ,  இசை – தரண்குமார் ..நடிப்பு – க.கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ் 

ஜீ5 ஓடிடி தளத்தில் (ZEE5)

வெளியான தேதி – 24 மார்ச் 2023…
9 எபிசோடுகளை கொண்ட செங்களம் தொடர் எப்படிதான் இருக்கிறது | பார்ப்போம்

இணையத் தொடர் என்றாலே த்ரில்லர் தொடர்கள்தான் அதிகம் வந்திருக்கின்றன. ஆனால், இது ஒரு அரசியல் தொடர், கூடவே கொஞ்சம் த்ரில்லரும் கலந்திருக்கிறது. தமிழில் ‘சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்,கொம்பு வச்ச சிங்கமடா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள முதல் இணையத் தொடர் இது.

தொடரின் ஆரம்பத்திலேயே ‘இன்று, அன்று ஒரு நாள்’ என டைட்டிலுக்கு முன்பாக ‘இன்று’ என்றும், பின்பாக அன்று ஒரு நாள் என்றும் காட்சிகள் நகர்கின்றன. கலையரசன், அவரது தம்பிகள் டேனியல் அனி போப், லகுபரன் ஆகியோர் ஏற்கெனவே மூன்று கொலைகளைச் செய்துவிட்டு, காட்டில் மறைந்து கொண்டு எம்எல்ஏ உதவியாளரை.எம்எல்ஏ ஆகியோரைக் கொலை செய்கிறார்கள். அவர்களைப் பிடிக்க காவல் துறை தினருகிறது என்பது ‘இன்று’ காட்சிகளாக நகர்கிறது….

விருதுநகர் மன்ற தலைவர் (சேர்மன்) பதவியை முப்பது வருடங்களாக கமுகு போல காத்து தக்க வைத்துக் கொண்டு இருக்கும் குடும்பத்தின் தலைவர் சிவஞானம் ( சரத்). தற்பொழுது  சேர்மன் இருக்கும் அவரது மூத்த மகன் ராஜமாணிக்கத்துக்கு
திருமண ஏற்பாடு தடபுலாக நடந்து வருகிறது. ராஜமாணிக்கத்தின் மனைவி இறந்த பிறகு, திருமணமே செய்யாமல் பல ஆண்டுகளான தனிமரமாக இருந்த ராஜமாணிக்கம் பணக்கார தொழிலதிபரின் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) திருமணம் செய்கிறார். சில மாதங்களில் கணவன் விபத்தில் இறந்துவிட அந்த பெண்ணுக்கு மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அனுதாபம் தன் படுகிறது அவளுக்கும் அரசியல்  ஆசை துளிர் துளிர்விட்டு வருகிறது.
ஆனால் சிவஞானத்துக்கோ வந்த உறவு என்பதை விட ரத்த உறவான தனது மகளோ மகனோ அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான்  ஆசை.  தான் புறக்கணிக்கப்படுவது அறிந்த மருமகள், மாமனாரை வீட்டை விட்டு எதிரில் இருக்கும் வீட்டுக்கு மாமனார் சம்மதத்துடன் குடியேறுகிறாள் தனக்கு விஸ்வாசம் நம்பிக்கையான சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம உள்ள தனது தோழி நாச்சியை ( ஷாலு) அழைத்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொள்கிறார் நாச்சிக்கு உதவியாக அவளது சகோதரர்கள் (கலையரசன், ஆன்னி போப், லகுபரன்)மூவரும் இருக்கிறார்கள்.  அவர்களது தாய் வேலாயி ( விஜி சந்திரசேகர் மாமனாரை மீறி விருதுநகர்:மாவட்ட நகரமன்ற தலைவரஆகிறார்(சேர்மன்)மருமகள்புகழ் பெறுகிறாள் இதை பொறுத்த கொள்ள  முடியாத மாமனார் மருமகளை அரசியலில் வீழ்த்த மனசுகுள்பலதிட்டங்கள் போடுகிறார்:விழாவில்கலந்து கொண்ட.சேர்மன்.சூரியகலா கொள்ளபடுகிறார்.
பழிவாங்க நாச்சி சகோதரர்கள் களம் இறங்குகிறார்கள்.
அமர்களமான,எபிசோடுகள் ஆரம்பம்:
ஆள் நடமாட்டமே இல்லாத காடு, திகிலூட்டும் இசை என முதல் எபிசோடின் ஆரம்பமே சும்மா அட்டகாசமாக உள்ளது. இரண்டு கொலைகளை செய்துவிட்டு, மூன்றாவது கொலை செய்ய நேரம் பார்த்து காட்டில் பதுங்கி வாழும் தனது மூன்று மகன்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து  வேலாயி (விஜி சந்திரசேகர்) ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் மகன்களை தேடி அலைகிறார். அவருடன் துணைக்கு உயரமான நாய் ஒன்று செல்கிறது. கலையரசன், டேனியல், பவன் மூவரும் வஞ்சத்தை தீர்க்க கொலைவெறியுடன் காத்திருக்கிறார்.இவர்கள் மூவரையும் போலீஸ் ஒருபுறம் வலைவீசித் தேடி அலைய, இவர்கள் அடுத்த கொலையை செய்ய காட்டில் இருந்து திட்டம்போடுகிறார்கள். இவர்கள் மூவரும் யார்… எதற்காக கொலை செய்தார்கள் என்பது அடுத்து வரும் எபிசோடில் விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு எபிசோடும் அடுத்தது என்ன என்பதை எதிர்பார்புடன் இருக்கும்
ந,டிகர்கள்.கலையரசன்
,முறுக்கு மீசை, தாடி, மடித்து கட்டிய வேட்டி என அட்டகாசமாக அசத்தி உள்ளார். உடன் ஆன்னி போப் லகுபரன் நடிப்பு அச்த்தி உள்ளனர்:
சின்னததிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணிபோஜன் மென்மையான
கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
இத்தொடரின் மூலம் தன் நடிப்பை வேறு பரிமானத்தை காட்டியுள்ளார் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது-விஜி சந்திரசேகர் நடிப்பு அசத்தி எல்லேரும் மனதில் இடம்பிடித்து  உள்ளார்:
இதில் பணியாற்றி  கேமரமேன், இசதொயமைப்பாளர் எடிட்டர் அனைத்துதொழில்நுட் கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார்கள்

தமிழில் இது போன்ற முழு நீள அரசியல் – த்ரில்லர் வருவது இதுவே முதல்முறை அரசியலில் இருப்பவர்களுக்கு பதவியும் அதிகாரம் எவ்வளவு பெரியே போதை என்பதை அப்பட்டமாக கூறியதற்காக, கதைகளம் இயக்குனர் பிரபாகரன்.நிச்சயம் பாராட்ட வேண்டும்.கதையின் சில திருப்பங்கள் எதிர்பாராதவை யாகவும், நம் நாட்டின் அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்திவிடுகிறது அரசியல் எப்படி என்பதை  அப்பட்டமாக காட்டி உள்ளீர்கள் மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்..