இந்திய சினிமாவின் பிரபல நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது.
ஆனால் இந்த முறை வெப் சீரிஸில் களம் இறங்கியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு அரக்கன் திகழும் தமிழ் ராக்கர்ஸை அழிக்க இந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளாக ஆகஸ்ட் 19ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் இந்த வெப் சீரிஸ் ஓடுகிறது.
ஏ வி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் ஷ்யாம் தயாரிக்க, அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் , அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், வினோதினி, மாரி முத்து, தருண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு புதிய திரைப்படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப்சைட்டில் (இணையதளத்தில்) வெளியாகி ஒட்டுமொத்த படத்தின் வசூலை அள்ளி குவிக்கிறது.இதனால் திரையுல தயாரிப்பாளருக்கு பெரு நஷ்டததை ஏற்படுத்துகிறது திரையுலகிற்க்கு தலைவலியாக, சவலாகவும் தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது.
கதைகளம்
பிரபல நடிகர் அஜய் நடித்த “மாய லோகம் ” படம் இப்படி திருட்டுத்தனமாக வெளியானதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
முன்னாள் பிரபல இயக்குனர் ஒருவரின் மகனும் அந்த இயக்குனரால் உருவாக்கப் பட்டு இன்று பிரபல நடிகராக விளங்குபவருமான அதிரடி ஸ்டார் ஆதித்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படமான “கருடா “தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில், அதை ஒரு நாள் முன்பாகவே எங்கள் இணையத்தில் வெளியிட்டுக் காட்டுவேன் என்று சவால் விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். அப்படி நடந்து விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படுவதுடன் நடிகரின் மார்க்கெட்டும் பாதிக்கப்படும் இயக்குனரின் இந்த பிரச்சனை திரையுலகிற்க்கும் காவல்துறைக்கு பெரிய சவாலாக அமைகிறது. இதனால் அருண் விஜய் அவரது உதவியாளர் வினோத் சாகர் மற்றும் சைபர் கிரைமில் உள்ள வாணி போஜன் மற்றும் வினோதினி ஆகியோர் களத்தில் இறங்குகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது.
இறுதியில் வென்றது யார்? கருடா படம் தியேட்டரில் வெளியானதா? இணையதளத்தில் வெளியானதா? ஆதித்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? அருண் விஜய் சவாலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்
காவல்துறை அதிகாரியாக அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தி உள்ளார் அருண் விஜய். படத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் எங்கிருந்து செயல்படுகிறது என்பது பற்றி விசாரணையில் அருண் விஜய் இறங்கும் போது அனைத்தும் ரசிகர்களுக்கு. மக்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிகையும் கொடுக்கிறது
இவரது மனைவியாக சில காட்சிகள வந்தாலும் ஐஸ்வர்யா மேனன் கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் நடிப்பு என கவருகிறார்.
வாணி போஜன் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார்.
அதிரடி ஸ்டார் ஆதித்யாக வருபவர் நடிகர் விஜய் தான் என்பது தெரிகிறது. அவரின் முகத்தை திரையில் காட்டாவிட்டாலும்.. விஜய்யின் போலவே உள்ளன.
அதிரடி ஸ்டார் ஆதித்யாக மேலும் (விஜய் )பண்ணை வீட்டில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து போடுவதும்.. ரசிகர்கள் அவருக்காக காத்திருப்பதும் என பல காட்சிகளை காட்டி உள்ளனர்.
மேலும் ஆதி்த்யாவின் அப்பாவாக வருபவரும் எஸ்ஏ சி போலவே செயல்படுகிறார். விஜய்க்காக அந்த காட்சிகளை மாற்றவும் இந்த காட்சிகளை மாற்றவும்… இந்த காட்சியை ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் நிபந்தனைகள் போடுவது நோடியாக தெரிகிறது. சரியான அப்பா நடிகர் தேர்வு
சைபர் கிரைம் அதிகாரி வாணி போஜனின் அப்பா தமிழ் ராக்கர்சால் பாதிக்கப்பட்டு உடல் நல குன்றிய படத் தயாரிப்பாளர் ஆவார். அவர்தான் எம் எஸ் பாஸ்கர். ஒரே காட்சி என்றாலும் நடிப்பில் அசத்தி உள்ளார்.
டெக்னீஷியன்கள்…
ராஜசேகரின் ஒளிப்பதிவும் சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு, விகாசின் பின்னணி இசையும் சரியான தரம். சண்டைக் காட்சிகள் மிரட்டல் . மனோஜ் குமார் கலைவாணன் கதையில்,
அறிவழகன், மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சு நாத், முருகப்பன் மெய்யப்பன், சுப்ரியா கொப்பா, ஆகியோரின் திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ளது.
தான் விரும்பும் ஹீரோ மீது இளம் அப்பாவியான ரசிகர்கள் வைத்திருக்கும் பக்தியை பாசத்தை சிறப்பாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கே நகைச்சுவை உண்டு .