கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாக தயாராகி வருகிறது.
இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமந்தா பத்திரிகையாளர் வேடத்தில் நடித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் படத்தில் முழுமையாக நடித்து கொடுத்திருக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவரும் வேளையில் மே 9ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது.