Balloon – Actress Anjali ” What marks the difference between a survivor and winner
Balloon – Actress Anjali ” What marks the difference between a survivor and winner is perseverance and hard work.In a day and age where hundreds of actresses are making their debut every year in Tamil cinema, only a handful mark their presence. Actress Anjali is definitely one among them who has rose herself to stardom earning herself a reputation of being a brilliant performer. Her next release ‘Balloon’ directed by Sinish, in which she is paired opposite Jai is all set for a grand release on December 29th. Speaking on ‘Balloon’ , Anjali says, “ I always make it a point to listen to the whole story and read the full bound script before committing to any script. I loved and accepted to do ‘Balloon’ not just because I love horror movies but I liked the script so much and the suspense element was brilliant. Though ‘Balloon’ is a horror thriller, it also has enough of romance, comedy and other emotions well blended. Director Sinish has defined each and every character very well. It is always a joy to work with Jai, who has done a dual role in this movie. My character in the movie is definitely not a usual one. I am sure the audience are going to enjoy and love ‘Balloon’ to the hilt. I am so happy that I have completed a decade as an actress and I want to work many more years and become a more successful actress and a performer “ . ‘Balloon’ is produced by ‘70mm Entertainment ‘ and will be release by ‘Auraa Cinemas’. விடாமுயற்சியும் உழைப்புமே வெற்றியாளர்களை சாதாரணமானவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது . வருடாவருடம் நூற்றுக்கணக்கான கதாநாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு சிலரே முத்திரையை பதிக்கின்றனர். அதிலும் குறிப்பிட்ட ஓரிருவர் நட்சத்திரமாக ஜொலிப்பது மட்டுமின்றி, சிறந்த நடிப்பாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பட்டியலில் , நட்சத்திர அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக்கொண்டு , சிறந்த நடிப்புக்கும் பெயர்போனவர் நடிகை அஞ்சலி. இவரது அடுத்த படமான ‘பலூன்’ படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். ‘பலூன்’ வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ‘பலூன்’ குறித்து அஞ்சலி பேசுகையில் , ” ஒரு படத்தின் முழு கதயையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த ‘பலூன்’ படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், எனக்கு பேய் படங்கள் பிடிக்கும் என்பது மட்டும் இன்றி, இப்படத்தின் கதை மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. ‘பலூன்’ ஒரு திகில் படமாக இருந்தாலும், இதில் காதல் , காமெடி மற்றும் அணைந்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் சினிஷ் அருமையாக வடிவமைத்துள்ளார். ஜெய்யுடன் பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமாக அனுபவம். இந்த படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இப்படத்தில் எனது கதாபாத்திரம் சராசரியான ஒன்று அல்ல. ‘பலூன்’ படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எனது முதல் படம் நடித்து பத்து ஆண்டு காலம் நிறைவுபெற்றுள்ளது. இன்னும் பல வருடங்கள் நடித்து நடிகையாகவும், நட்சித்திரமாகவும் மேலும் உயர முனைப்போட்டுள்ளேன் ” ‘பலூன்’ படத்தை ’70mm என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ‘Auraa Cinemas’ தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது.