June 10, 2023

Airaa

நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”.
 
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி , ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். “அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை  லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்” திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி  இயக்குகிறார்.   ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, “அவள்” படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர்  அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
” நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  சர்ஜூன் கதை  சொன்ன மாத்திரத்தில்  இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.   “ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு horror படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *