November 29, 2023

Billa Pandi” Press Release and Stills

 
J.K.பிலிம் புரொடக்ஷ்ன் தயாரிக்கும் 
R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிக்கும் “பில்லா பாண்டி”
தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது
அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே “தல” இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள்.
 
இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான  K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி படம் தீபாவளி அன்று திரைக்குவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர் K.C.பிரபாத்  கூறினார்.
 
பில்லா பாண்டி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் K.C.பிரபாத், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  
 
மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும்  “எங்க குல தங்கம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
 
“பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.
 
மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.
 
சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.
 
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
 
தயாரிப்பு – K.C.பிரபாத் (J.K.பிலிம் புரொடக்ஷ்ன்)
இயக்கம் – ராஜ் சேதுபதி
கதை, திரைக்கதை, வசனம் – MMS மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜீவன்
இசை – இளையவன்
படத்தொகுப்பு – ராஜா முகம்மது
கலை – மேட்டூர் சௌந்தர்
நடனம் – கல்யாண், விஜி, சாண்டி
சண்டைப்பயிற்சி – சக்தி சரவணன்
பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி
மக்கள் தொடர்பு – நிகில்
 
 
Thanks & Regards,
 
Nikkil & Team

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *