இதனையடுத்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.எம்.பல்கலை கழக வேந்தர் பாரிவேந்தர் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஸைட் ஃபஸ்ட் (Sight First )மாவட்டத் தலைவர்அரிமா.மு.ப.செந்தில் நாதன், அரிமா .ஆர்.சாரங்கபாணி, அரிமா.டி.பிரபாகர், அரிமா.ஜி. விஜயகுமார், அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையர் சுதாகர், காவல் துறை உதவி ஆணையர் குணசேகர் , அரும்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன், ஆசிரியர் தின நிகழ்ச்சி தலைவர் அரிமா.ராமசாமி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆசிரியர் தின நிகழ்ச்சி இணை தலைவர் அரிமா.எம்.முத்துகிருஷ்ணன், ஊடக ஒருங்கிணைப்பாளர் அரிமா.பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்