
‘டாவு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு ‘டாவு’ அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் பேசுகையில் , ” முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் விதமும் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன் ”
கதாநாயகன் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் அடுத்த படமான ‘பார்ட்டி’ படத்திலும் சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. ‘டாவு’ படம் சந்தோஷ் தயாநிதியின் இசையில் , தீபக் குமார் பதி ஒளிப்பதிவில் , பிரவீன் K L படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில் பிரபுவின் சண்டை இயக்கத்தில் , அஜய் மற்றும் சதீஷின் நடன இயக்கத்தில் உருவாகிவருகிறது ”.
