28.01.2018 அன்று தண்டையார்பேட்டையில் 4வது மாடியிலிருந்து வாலிபர் குதித்ததில் சிக்கி படுகாயமடைந்து சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் என்பவரின் 4 வயது மகள் தன்யஸ்ரீ-ஐ மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (31.01.2018) சந்தித்து சிறுமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்து, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்
