

‘Kaali’ is produced by ‘Vijay Antony Film Corporation’. This action drama also stars Shilpa Manjunath and Amritha as other heroines. Actors Yogi Babu, RK Suresh, Madhu Sudhan and Jaya Prakash play important characters in ‘Kaali’. The cinematographer of ‘Kaali’ is Richard M Nathan, editor is Lawrence Kishore, Art director is Sakthee Venkatraj, Stunt choreographer is Sakthi Saravanan and dance choreographer is Brindha.


விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காளி’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான போஸ்டருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் இப்படத்தின் எல்லா பாடல்களும் அசத்தலாக அமைந்துள்ளன எனக்கூறப்படுகிறது.’காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுத்துள்ளது. இப்படத்தின் விளம்பர யுக்திகளை இப்பாடல் வெளியீட்டின் மூலம் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளனர் .இப்படத்தை ‘Vijay Antony Film Corporation’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு action படமாகும்.
இப்படத்தில் விஜய் ஆண்டனியின் மற்ற இரண்டு ஜோடிகளாக ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். யோகி பாபு, RK சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதனின் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில் , சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில், பிருந்தாவின் நடன இயக்கத்தில் ‘காளி’ உருவாகிவருகிறது.