
ஜிப்ரான் இசை நேர்த்தியுடன் எப்போதும் இசை ரசிகர்களுக்கு ஒரு இதமான, அமைதியான, இதயத்தை வருடும் ஒரு அனுபவத்தை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. ஒரு விதிவிலக்கான் இசையை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்ச்சி அவரை மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அவரை லைம்லைட்டில் வைத்திருக்கிறது. நல்ல தரமான மற்றும் நேர்மையான ஒலி மற்றும் இசைக்காக கொண்டாடப்பட்ட ஜிப்ரானை, தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான ‘கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது’ வழங்கி கவுரவிக்கிறது.

”
சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.