Producer Council & Nadigar Sangam Letter – Malaysia Cricket
மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா,ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து!
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
– தென்னிந்திய நடிகர் சங்கம்